No menu items!

Happy Anniversary நயன்தாரா!!

Happy Anniversary நயன்தாரா!!

கதை சொல்ல போனால் கால்ஷீட் கிடைக்கலாம். ஆனால் காதலியே கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்த ஒன்லைன்தான் நயன்தாரா – விக்னேஷ்சிவன் இருவருக்கும் இடையிலான ஒரு எமோஷனாலான காதல் கதை.

இரண்டு காதல் தோல்விகளை ஒரு நார்மலான நபரால் எளிதில் கடந்து போய்விடமுடியும். ஆனால் கோபம், பாசம் இந்த இரண்டிலும் எப்போதுமே உச்சத்தைக் காட்டும் நபரால் அப்படி கடந்துவிட முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக அமைந்ததுதான் ‘நானும் ரவுடிதான்’. படம்.

’நானும் ரவுடிதான்’ இந்தளவிற்கு நயன்தாரா வாழ்வில் முக்கியத்துவம் பெற காரணங்கள் இரண்டு.

முதலில் சிம்பு அடுத்து பிரபு தேவா. இந்த இருவரும் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார்கள்.

இதில் சிம்புவுடனான காதல் கூட, சினிமாவில் ஒன்றாக நடிக்கும் போது ஒரு சில ஜோடிக்கு ஒரு ஃபீல் குட் உணர்வு உண்டாகுமே அதே போல் உருவான ஒன்றுதான். ஆனால் அந்த உணர்வு காதலாகி திருமணம் வரை போனது ஒரு சிலருக்குதான். அந்தப்பட்டியலில் சிம்பு-நயன்தாராவுக்கு இடமில்லாமல் போனது. இதனால் நயன்தாராவுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லாமல் போனது.

நயன்தாராவின் முதல் காதல் முறிவுக்கு பின் ஆறுதலாய் இருந்தது பிரபுதேவா. இந்த முறை நயன்தாரா காதலனை எதிர்பார்க்கவில்லை. தன் வாழ்க்கை துணையை எதிர்பார்த்தார்.

தன்னிடம் வேலைப்பார்க்கும் டச் அப் பாய், மேக்கப் மேன், டிரைவர் என அனைவருக்கும் வீடு, கார், பைக் எல்லாம் வாங்கி கொடுக்கும் நயன்தாரா, வாழ்க்கை துணையாக போகிறவருக்காக தான் சம்பாத்தித்தை எல்லாம் கொடுத்தார். துபாயில் டான்ஸ் அகாடமி ஆரம்பிக்க பண உதவி செய்தார். லட்சம் விலையில் வாட்ச்களை பரிசளித்தார். இப்படி காதல் பரிசுகளின் பட்டியல் ரொம்ப பெரிது.

ஆனாலும் இங்கேயும் பிரபுதேவாவுடனான எமோஷனலான உறவு எட்டாமல் போனது. ரொம்பவே நொறுங்கிப் போனார் நயன்தாரா. கையில் குத்திக்கொண்ட பிரபு என்ற டாட்டூ, மனதைக் குத்திக்கொண்டே இருந்தது.

இந்த சூழலில்தான் நயன்தாராவுக்கு கதை சொல்ல அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார் விக்னேஷ் சிவன்.

சென்னையில் இருக்கும் தாஜ் க்ளப்ஹவுஸூக்கு விக்னேஷ் சிவனை வரச்சொன்னார் நயன்தாரா.

அந்த சந்திப்பில் ஆரம்பித்தது, இன்று உயிர் மற்றும் உலக் என இரட்டையர்கள் வரை தொடர்கிறது.

20215-ல் ’நானும் ரவுடிதான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்றாலும், க்ரீன் ரூமில் நயன்தாராவின் அசல் ஹீரோவாக மாறியிருந்தார் விக்னேஷ் சிவன்.

அப்படத்தின் ப்ரஸ் மீட்டில் கூட, ‘அந்த ரெண்டு பேரும் காதல் புறாக்கள் மாதிரிதான் ஒண்ணா இருக்காங்க’ என்று போட்டு உடைத்தார் மன்சூர் அலிகான்.

அப்போதுதான் நயன் – விக்கி காதல் சிரீயஸாக போய் கொண்டிருக்கிறது என்பது வெளியே தெரிய ஆரம்பித்தது.

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்த பிறகு, அவருக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்கவேண்டுமென்ற ஆசை அதிகமானது.

இதனால் உடலை சிக்கென்று வைத்து கொள்ள, அவர் வயிற்றில் செய்து கொண்ட சிகிச்சையினால் குழந்தைப் பெற்றுகொள்ள முடியாத சூழல் உண்டானது.

நமக்கு குழந்தைகள் இல்லையென்றால் என்ன.. நீயே எனக்கு குழந்தை என்ற விக்னேஷ் சிவனை அப்படியே பிடித்து போனது. அதை வெளிப்படுத்தும்விதமாக பின்னாளில் எழுதிய பாடல்தான் ‘நான் பிழை.. நீ மழலை’
இதனால்தான் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த விக்னேஷ் சிவனின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகளாக கொண்டாடுகிறார் நயன்தாரா.

இப்படி ஒரு சினிமாவுக்கான திரைக்கதையைப் போல இவர்களது திருமணம் அமைய, அதிலும் சில ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஏமாற்றங்கள்.

அதில் முக்கியமானது, அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்தது. சொந்தமாக தயாரித்த ’கனெக்ட்’ சரியான வெற்றியாக அமையாமல் போனது. உறவுகளிடையே உரசல் உருவானது.

இப்படி பிரச்சினைகள், வருத்தங்கள் என எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதில் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா ரொம்பவே ஸ்ட்ராங்.

ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த ஜோடிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள்!


கேரளாவில் கெத்து காட்டிய ரஜினி!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் இந்த இரு இயக்குநர்களின் பெயர்கள்தான் அதிகம் அடிப்படுகின்றன. இவர்கள் இருவரும் இயக்கும் படங்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள்.
அதேபோல் இவர்கள் இருவரும் தங்களது படங்களில் தமிழ் சினிமா நட்சத்திரங்களை மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி சினிமாக்களின் நட்சத்திரங்களையும் தங்களது படங்களுக்கு வளைத்துப் போட்டு இருப்பது இவர்களது கூடுதல் மவுசுக்கு ஒரு காரணம்.

இப்படி பல மொழி சினிமா நட்சத்திரங்களை தங்களது படங்களில் நடிக்க வைப்பதால் என்ன பலன் என்று யோசிக்கலாம். நிச்சயம் பலன் இருக்கிறது. இந்தப் படங்களின் திரையரங்கு உரிமை, சேட்டிலைட் உரிமை, ஒடிடி உரிமை, டிஜிட்டல் உரிமை என எல்லாமும் பல கோடிகளில் புரளுகின்றன.

‘லியோ’ படத்தின் ஒடிடி உரிமை மட்டுமே 70 கோடிக்கு போயிருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், இப்போது ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸூக்கு தயாராக இருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் வியாபார களத்தில் இறங்கி இருக்கிறது.

லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால், ரஜினியின் ’ஜெயிலர்’ பட விநியோக உரிமை கேரளாவில் பெரும் விலைக்குப் போய் இருக்கிறதாம். கேரளாவில் விஜய்க்கு மவுசு ரொம்பவே அதிகம். ஆனால் இந்த முறை ரஜினியின் ஜெயிலரின் விநியோக உரிமையை 5.5 கோடிக்கு ஸ்ரீகோகுலம் மூவிஸ் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் படம் இந்தளவிற்கு வியாபாரமாகி இருப்பது சமீபகாலத்தில் இதுதான் அதிகம் என்கிறார்கள். ரஜினியுடன் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய்க்கு ஜோடி ஜோதிகா?

விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘லியோ’ படம் பற்றிய பல தகவல்கள் வைரலாகி கொண்டே இருக்கின்றன. இதற்கிடையில் விஜய் லியோவுக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத ‘விஜய்68’ படம் பற்றிய யூகங்களும், கிசுகிசுக்களும் இணையத்தை மூச்சு முட்ட செய்து வருகின்றன.

லேட்டஸ்ட் பரபரப்பு, விஜய்68-ல் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருக்கிறார் என்பதுதான்.

வெங்கட்பிரபு சமீபத்தில் சூர்யாவை சந்தித்ததாகவும், விஜய்68-ல் கதாநாயகியாக ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்குமென்றும் கலந்துரையாடியதாக ஒரு கிசுகிசு உலா வருகிறது.

2000-ல் வெளியான ‘குஷி’ படத்தில் விஜயும், ஜோதிகாவும் நடித்தார்கள். அந்தப்படம் சூப்பர்டூப்பர் ஹிட். அந்தப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், ஜோதிகா ரோலில் பூமிகாவும் நடித்தார்கள். தமிழ் குஷியை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா தெலுங்கிலும் அதே பெயரில் இயக்கினார். அங்கேயும் படம் ஹிட்.

விஷயம் என்னவென்றால், குஷியை தமிழிலும், தெலுங்கிலும் இயக்கிய எஸ்.ஜே. சூர்யா இப்போது விஜய்68-ல் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்பதுதான். டைரக்டர் அதே ஜோடிக்கு வில்லனாகி இருப்பதுதான் ஹைலைட்.
ஆனால் ஜோதிகா தரப்பிலிருந்து இன்னும் கமிட்டாவது குறித்து உறுதி செய்யபபடவில்லை என தெரிகிறது.

ஜுன் 22-ம் தேதி ‘லியோ’ பட விழாவில், அநேகமாக விஜய்68 பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...