No menu items!

‘Bigg Boss’ – பவாவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி!

‘Bigg Boss’ – பவாவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி!

பிக்பாஸ் எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு இதயத்தில் இருந்த அடைப்பை நீக்க ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் பவாவின் மனைவி சைலஜா தெரிவித்துள்ளார்.

பவா செல்லதுரை தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான எழுத்தாளர். மேலும், பேச்சாளர், கவிஞர், கதைசொல்லி, களப்பணியாளர், திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி, அரசியலாளர் என பன்முகம் கொண்டவர். முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் மாவட்டச் செயலாளராகவும் தலைவராகவும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

பவா செல்லதுரை தொடக்கத்தில் தனது சொந்த ஊரான திருவண்ணாமலையில் ஐம்பது பேர் முன்னிலையில் தமிழிலக்கியக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தவர் இன்று உலகம் முழுவதும் தமிழர்களிடையே பிரபல கதைசொல்லியாக புகழ்பெற்றுள்ளார். எழுத்தாளனாக அடைந்ததைவிட, பத்து மடங்கு வாசகர்களை கதைசொல்லியாக அடைந்திருப்பதாகவும், தனது புத்தகங்களை மட்டுமல்லாது தான் கதை சொல்லும்போது குறிப்பிடுகின்ற அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையும் தனது வாசகர்கள் தேடி வாசிக்கிறார்கள் என்றும் சொல்கிறார் பவா.

பவா செல்லத்துரை மட்டுமல்ல அவரது குடும்பத்திலும் அனைவரும் இலக்கியவாதிகள்தான். மனைவி சைலஜா மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் ‘சிதம்பர நினைவுகள்’ மற்றும் மலையாளத்தில் பிரபலமான நாவலான ‘சுமித்ரா’ உட்பட பல மொழியாக்கங்களைச் செய்தவர். மகன் வம்சி பெயரில் ஒரு பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மகள் மானசியும் மொழிபெயர்ப்பாளர். ‘ஆயிஷா’ என்னும் புத்தகத்தை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மகன் வம்சி ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இயக்குபவர்.

கதை சொல்லியாக பிரபலமான பவா செல்லதுரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 7இல் கலந்துக்கொண்டதையடுத்து, இலக்கிய உலகைக் கடந்தும் பிரபலமானார். ஆனால், பவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது முதலே சர்ச்சைகளும் அவரை சுற்றத் தொடங்கின. முதலில் ஓர் இலக்கியவாதியான பவா எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லலாம் எனத் தொடங்கிய சர்ச்சை, பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் பவா செல்லத்துரை செயல்பாடுகள் தொடர்பானதானதாக மாறின. இதனையடுத்து, திடீரென பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறினார் பவா.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சில நாட்கள் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தார் பவா. பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கதை சொல்லத் தொடங்கியவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்நிலையில், பவாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் அவரது மனைவி சைலஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, “பவாவுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி முடிந்து நான்கு நாட்கள் நெருப்பின் மேல் வாழ்ந்து கழித்து இன்று கொஞ்சம் தேறி நார்மல் வார்டுக்கு மாற்றப் பட்டிருக்கிறார். அவரின் நலன் கருதி நண்பர்கள், பவாவை தொடர்பு கொள்ளவோ நேரில் சந்திக்கவோ முயற்சிக்க வேண்டாம் ப்ளீஸ். அது அவரைத் தேற்ற, உடல் நலம் சீராக்க உதவும் நண்பர்களே” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...