No menu items!

ப்ளஸ் டூவுக்குப் பிறகு – என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? | 1

ப்ளஸ் டூவுக்குப் பிறகு – என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? | 1

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கல்வி வழிகாட்டி பொன். தனசேகரன் தரும் பரிந்துரைகள் இங்கே…

படிப்பில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. சிறப்பாக படிப்பவர்களுக்கு எந்த படிப்பானாலும் வாய்ப்புகள் பிரகாசமாகத்தான் உள்ளன. உதாரணமாக அனைவரும் தவிர்க்கும் வரலாற்றை தேர்வு செய்து படித்து அதில் பண்டிதனாக வெளிவருபவர்களுக்கு அவ்வளவு நல்ல வாய்ப்புகள் உள்ளது.

இன்று இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் அனைவரது கனவாகவும் உள்ளது. ஆனால், இந்த படிப்புகளில் சேர்ந்துவிட்டாலே வேலை உறுதி என்பதில்லை. இதில் சிறப்பான மதிப்பெண்களுடன் வெளிவரும் 10 சதவிகிதம் பேருக்குத்தான் உடனே வேலை கிடைக்கிறது. படிப்போடு திறமையையும் தகுதியையும் வளர்த்துக் கொண்டவர்களுக்குதான் நிறுவனங்களின் வாசல்கள் திறந்திருக்கும். தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்வது என்பது அந்த பாடத்தில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே நடக்கும். எனவே, என்ன படிக்கலாம் என்பதில் நம் முதல் தேர்வாக இருக்க வேண்டியது, நாம் ஆசைபடும் படிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்பா சொன்னார், அம்மா சொன்னார், மாமா சொன்னார், நண்பர் சொன்னார் என அவர்கள் விருப்பத்துக்கு இசைந்து செல்லக்கூடாது.

இரண்டாவது தேர்வு, படிக்கச் செல்லும் நிறுவனம். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், வசதிகள், வரலாறு பற்றி அறிந்து நல்ல நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.

மிகச் சிறப்பாக படிப்பவர்களின் முதல் தேர்வு மருத்துவ படிப்புகள்தான். இன்று ப்ளஸ் டூ முடித்தாலும் மருத்துவ படிப்பில் சேர நீட் அவசியம். எனவே, டாக்டருக்கு படிக்க விரும்புபவர்கள் நீட்டுக்கும் தயாராகி இருக்க வேண்டும். அதேநேரம், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாதவர்கள் தங்கள் மருத்துவக் கனவை தூக்கி எறிந்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. துணை மருத்துவ படிப்புகள் நிறைய உள்ளன. பி.பார்ம், பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் இந்திய மருத்துவம் தொடர்பான படிப்புகள், காலநடை மருத்துவம் என பல வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர 10 – 20 மெடிக்கல் டெக்னாலஜி படிப்புகளும் உள்ளன.

இதற்கு அடுத்தது நிறைய பேரின் தேர்வாக இன்ஜினியரிங் இருக்கும். இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப துறையில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதே நேரம் இன்ஜினியரிங்கில் சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்கு இன்று முக்கியத்துவம் இல்லாததுபோல் தோன்றினாலும், பெரிய பெரிய கட்டிடங்கள், பாலங்கள் என வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால் சிவில் படித்தவர்களுக்கும் வேலை இருந்துகொண்டேதான் உள்ளது. இயந்திரங்களின் பயன்பாடும் தொடர்ந்து இருக்கும் என்பதால் மெக்கானிக்கல் படிப்பு முடித்தவர்களுக்கும் வேலைகள் உள்ளன. இன்பர்மேசன் டெக்னாலஜி படித்துவிட்டாலே எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. அதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் வேலைகள் உடனே கிடைக்கும். எனவே, என்ன படிக்கிறோம் என்பதுடன் எப்படி படிக்கிறோம் என்பதும் முக்கியம்.

மருத்துவ துறையில் பயோ டெக்னாலஜியில் இருந்து நேனோ டெக்னாலஜி புது துறையாக உருவாகி வருகிறது. இதுபோல் இன்ஜினியரிங்கில் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜன்ஸ், டேட்டா சயின்ஸ் போன்ற பல துறைகள் புதிதாக உருவாகியுள்ளன. இவற்றின் தாக்கத்தை பல்வேறு துறைகளில் பார்க்கவும் முடிகிறது. மெக்கானிக்ஸுடன் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து மெக்கட்ரானிக்ஸ் என்று புதிய படிப்பும் வந்துள்ளது. இப்படி புதிதாக நிறைய படிப்புகளும் வந்துள்ளன.

வாய்ப்புகள் வானம் போல் விரிந்து கிடக்கிறது. யார், எதை தேர்வு செய்து படிக்கலாம் என ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...