No menu items!

ப்ளஸ் டூவுக்குப் பிறகு – என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? | 2

ப்ளஸ் டூவுக்குப் பிறகு – என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? | 2

ப்ளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கல்வி வழிகாட்டி பொன். தனசேகரன் தரும் பரிந்துரைகள் இங்கே…

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“முதலில் ப்ளஸ் 2-இல் பயாலஜி, மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்கள் கொண்ட முதல் குரூப் எடுத்து படித்தவர்கள் +2க்கு பிறகு என்ன படிக்கலாம் எனப் பார்ப்போம். பயாலஜி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., இந்திய மருத்துவம், பிடிஎஸ், பி.பார்ம், பார்ம் டி, அக்ரிகல்சர், பிசரீஸ், மைக்ரோ பயாலஜி, ஆப்ட்டோமெட்ரி போன்ற பல படிப்புகள் உள்ளன. இவை தவிர மெடிக்கல் டெக்னாலஜி தொடர்பாக மட்டும் 10க்கும் மேற்பட்ட  படிப்புகள் உள்ளன. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், எம்ஜிஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிடிஎஸ் தவிரவும் கால்நடை மருத்துவத்தில் பல படிப்புகள் உள்ளன. இதுபோல் மீன்வளத்துறையிலும் பிசரீஸ் தவிரவும் பல படிப்புகள் உள்ளன.

ப்ளஸ் 2-இல் முதல் குரூப் எடுத்தவர்களும் மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்யூட்டர் சயின்ஸ் இணைந்த இரண்டாவது குரூப் எடுத்துவர்களும் ப்ளஸ் 2-க்கு பிறகு மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அடிப்படையில் சேர்வதாக இருந்தால் முதல் தேர்வு இன்ஜினியரிங். 40க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் படிப்புகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் வழியாக கல்லூரிகளிலோ, நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலோ, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலோ சேரலாம். 

சயின்ஸ் பாடங்களை மேம்படுத்துவதற்காக ஐஐசிஆர் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இங்கு ப்ளஸ் 2 நிலையிலேயே தேர்வு செய்து ஐந்தாண்டு படிக்க வைக்கிறார்கள்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் சயின்ஸ் இன்டக்ரேட்டட் படிப்புகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள்.

இன்ஜினியரிங் டிசைன் படிக்க விரும்பவர்கள் சிறுசேரி சென்ட்ரல் இன்ஸ்டிடியூட், நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் போன்ற இடங்களில் இணைந்து படிக்கலாம்.

தவிர பிஎஸ்சி மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி படிப்பவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. சென்னை மேத்தமேட்டிக்கல் இன்ஸ்டிடியூட் போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் படித்தால் இன்னும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

பிஎஸ்சி, எம்எஸ்சி முடித்த பின்னர் மைசூர் ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷனில் பிஎஸ்சி எட், எம்எஸ்சி எட் படித்தாலும் வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். இங்கு ஐஐடிக்கு நிகராக சயின்ஸ் பாடங்களை சொல்லித் தருவார்கள். படித்துவிட்டு வருபவர்களை ஃபெல்லோஷிப்புடன் கல்பாக்கம் போன்ற இடங்களில் இன்டர்ன்ஷிப்பிற்கு எடுத்துக்கொள்வார்கள்.  மைசூரில் ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷனில் முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் நிறைய பேர் சயிண்டிஸ்டாக உள்ளார்கள். இங்கு நுழைவுத் தேர்வு வைத்துதான் தேர்வு செய்வார்கள்.

பியூர் சயின்ஸ் படிக்க விரும்புபவர்களுக்கு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் நிறைய கோர்ஸ்கள் உள்ளது.

சிலர் ப்ளஸ் 2-க்கு பின்னர் ஆர்வம் மாறி வேறு துறைக்கு செல்ல விரும்புவார்கள். அதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உதாரணமாக சிஏ படிக்க விரும்புபவர்கள் ப்ளஸ் 2-இல் காமர்ஸ் படிக்காததால் இனி வாய்ப்பில்லை என ஒதுங்க வேண்டியதில்லை. சில அடிப்படை படிப்புகளை முடித்துவிட்டு சிஏ போகலாம்.

இவை தவிர ப்ளஸ் 2-இல் எந்த படிப்பு எடுத்தாலும் சேர வாய்ப்புள்ள ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஃபைன் ஆர்ட்ஸ், போன்ற கோர்ஸ்களும் நிறைய உள்ளது. அவற்றில் சேர்ந்தும் படிக்கலாம்.

தொடர்ந்து, ப்ளஸ் 2-இல் காமர்ஸ், எக்கனாமிக்ஸ் படித்தவர்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் பற்றி பார்ப்போம்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...