No menu items!

பிக் பாஸ் வெற்றியாளர்கள் என்ன செய்கிறார்கள்?

பிக் பாஸ் வெற்றியாளர்கள் என்ன செய்கிறார்கள்?

பிக் பாஸின் 7-வது சீசன் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப் போகிறது. இந்த சீசனுக்கான நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பே, இதில் 2 பிக் பாஸ் வீடுகள் இருக்குமா? எத்தனை போட்டியாளர்கள் இருப்பார்கள்? யாரெல்லாம் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதுபோன்ற விவாதங்கள் ரவுண்டு கட்டி அடிக்கின்றன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஏற்கெனவே கடந்த 6 சீசன்களில் பிக் பாஸ் பட்டம் வென்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற விசாரணையில் இறங்கினோம்…

பிக் பாஸின் முதல் சீசனில் மகுடம் சூடியவர் ஆரவ். இவரது முழுப் பெயர் ஆரவ் நஃபீஸ் கிசார். பிக் பாஸ்க்கு முன்பு மாடலாகவும், பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராகவும் இவர் பணியாற்றி வந்தார். பிக் பாஸில் பட்டம் வென்ற பிறகு பல படங்களில் அவருக்கு வாய்ப்பு வந்தது. சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இவர் நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜா பீம், மீண்டும் வா அருகில் வா ஆகிய படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.

பிக் பாஸ் 2-ல் பட்டம் வென்றவர் ரித்விகா. இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பட்டம் வென்ற ஒரே பெண் போட்டியாளர் இவர்தான். பிக் பாஸில் பட்டம் வெல்வதற்கு முன்பே ரித்விகா பல படங்களில் நடித்திருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கதில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. பிக் பாஸ்க்கு பிறகு, ‘நவரசா’ ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படங்களில் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ்-3ல் பட்டத்தை வென்றவர் முகேன் ராவ். பிக் பாஸ்க்கு முன்னரே தனது பாடல்கள் மூலம் அனைவரையும் கட்டிப் போட்டவர் முகேன். இவரது அபிநயா என்கிற ஆல்பம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்த்து. பிக் பாஸ்க்கு பின்னர், நடிகராகவும் வலம் வருகிறார் முகேன். வேலன் படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார்.

பிக் பாஸ் -4-ன் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன். பிக் பாஸ் சீசன் – 4 நடந்த காலக்கட்டதில் இவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. இதில் ஆரிதான் வெற்றி பெறுவார் என்று ஷோ முடியும் முன்னரே மக்கள் முடிவு செய்துவிட்டனர். பிக் பாஸ்க்கு முன்னரே, பல படங்களில் நடித்திருக்கிறார் ஆரி. இவருடைய முதல் தமிழ் படம் ரெட்டைசுழி. பிக் பாஸ்க்கு பின்னர், ஒரு நடிகனாக பிசியாகி விட்டார் ஆரி. இவர் நடித்த பகவான், எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் ஆகிய படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

பிக் பாஸ் 5-ல் டைட்டில் வின்னர் ஆனவர் ராஜு. பிக் பாஸ்க்கு முன்னரே நடிகனாக, தொகுப்பாளராக அனைவருக்கும் தெரிந்த முகம்தான் ராஜூ. ஏராளமான சீரியல்களில் நடிதிருக்கிறார் ராஜு, முக்கியாக கனா காணும் காலங்கள், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 போன்ற சீரியல் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார் ராஜு. பிக் பாஸ்க்கு பின்னர், விஜய் தொலைகாட்சியில் ராஜு ஊட்ல பார்டி, bb ஜோடிகள் சீசன் 2 -வின் தொகுப்பாளர் என்று பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி வருகிறார்.

பிக் பாஸ் 6 -ன் டைட்டில் வின்னர் அஜீம். பிக் பாஸில் அதிகப்படியாக கன்டன்ட் ஆனவர் அஜீம் தான். பிக் பாஸ்க்கு உள்ளேயும் அவர் தான் கன்டன்ட், பிக் பாஸ்க்கு வெளியேவும் அவர்தான் கன்டன்ட் மெடீரியல். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்தற்கு நிறைய விமர்சனங்களும் வந்தன. பிக் பாஸ்க்கு முன்னரே, பல தொலைக்காட்சி தொடர்களில் நடிதிருக்கிறார் அஜீம். இவர் நடித்த பகல் நிலவு, பிரியமானவாளே, கடைக்குட்டி சிங்கம் தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனந்த கிருஷ்ணன் இயக்கதில் விரைவில் வெள்ளித்திரையிலும் நடிக்கவுள்ளார் அஜீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...