No menu items!

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

கில்லர் சூப் ( Killer soup – இந்தி வெப் சீரிஸ்) – நெட்பிளிக்ஸ்

ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் ஓடிடியின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த மனோஜ் பாஜ்பாயுடன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, லால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் கில்லர் சூப். இத்தொடரில் மனோஜ் பாஜ்பாய் இரட்டை வேட்த்தில் நடித்திருக்கிறார்.

பிசினஸ்மேனான தன் கணவனை அவரைப் போன்ற உடல் அமைப்பு கொண்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொல்கிறாள் நாயகி. கணவருக்கும், கள்ளக்காதலனுக்கும் இடையில் இருக்கும் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி கணவனின் சொத்தை கொள்ளையடிக்க முயல்கிறார். இவர்களின் நடத்தையில் சந்தேகப்படும் காவல்துறை அதிகாரியான நாசர், உண்மையை வெளியில் கொண்டுவர முயற்சிக்கிறார். அவரால் அந்த முயற்சியில் வெற்றிபெற முடிந்ததா என்பதே இந்த தொடரின் கதை.

தெலங்கானாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த தொடரை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். கொஞ்சம் நகைச்சுவை, நிறைய க்ரைம் என பரபரப்பாக செல்கிறது இந்த தொடர்.


ஜர்னி ( Journey – தமிழ் வெப் சீரிஸ்) – சோனி லைவ்

பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சேரன் இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் ஜர்னி.

மிகப்பெரிய கார் கம்பெனியின் உரிமையாளரான சரத்குமாருக்கு, அவரது நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்புக்கு ஒருவரை நியமிக்க வேண்டி இருக்கிறது. அந்த பொறுப்புக்கு பிரசன்னா, ஆரி, அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி ஆகிய 5 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சூழலில் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே அந்த வேலை மிக முக்கியமானதாக இருக்கிறது.

இதில் யாருக்கு அந்த வேலை கிடைக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கதை.


டைகர் 3 (Tiger – 3 – இந்தி) – அமேசான் ப்ரைம்

யஷ்ராஜ் பிலிம்ஸின், ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹே, வார், பதான் படங்களின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் வந்திருக்கும் படம் டைகர் 3. சல்மான் கான், காத்ரினா கைஃப் நடித்துள்ள இப்படத்தை மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார்.

இந்திய உளவாளியான சல்மான் கானும், பாகிஸ்தானின் உளவாளியான காத்ரினா கைஃபும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்கு பின் சல்மான்கான் மட்டுமே உளவாளியாக பணியாற்ற, காத்ரினா கைஃப் வேலையை விடுகிறார். ஒருநாள் ஆபத்தில் இருக்கும் ஒரு நபரை சல்மான்கான் மீட்கிறார். அந்த நபர் கத்ரீனா இன்னும் உளவாளியாகத்தான் செயல்படுகிறார் என்று கூறுகிறார். இதனால் மனமுடைந்த சல்மான்கான் தன் மனைவியான காத்ரீனாவை பின் தொடர்கிறார்.காத்ரீனா யார் என்பதை சல்மான்கான் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மசாலா படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற வீக் எண்ட் ட்ரீட் இது.


பேரில்லூர் ப்ரீமியர் லீக் (Perilloor Premier League – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

பிரவீன் சந்திரன் இயக்கத்தில் சன்னி வெய்ன், நிகிலா விமல், அஜு வர்க்கீஸ், விஜயராகவன் உள்ளிட்டோர் நடித்த பேரில்லூர் பிரீமியர் லீக் வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இயற்கை வளம் நிறைந்த பேரில்லூர் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை குறிவைத்து இரு தரப்புகளிடையே ஏற்படும் மோதல், மற்றும் அதனுடன் இணைந்த ஒரு காதல் கதையை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

80-களில் வெளிவந்த மலையாள திரைப்படங்களைப் போல மிக இயல்பான கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் தொடர் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...