No menu items!

Tilak Varma – இந்திய கிரிக்கெட்டின் புதிய நாயகன்!

Tilak Varma – இந்திய கிரிக்கெட்டின் புதிய நாயகன்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் மூலம் இந்தியாவுக்கு ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய திலக் வர்மாதான் அந்த நட்சத்திரம். வெஸ்ட் இண்டீஸில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் மொத்தம் 139 ரன்களைக் குவித்துள்ள திலக் வர்மா, இந்த தொடரிலேயே இதுவரை அதிக ரன்களைக் குவித்த வீர்ர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

யார் இந்த திலக் வர்மா?

ஹைதராபாத்தில் பிறந்த 20 வயது இளம் கிரிக்கெட் வீர்ரான திலக் வர்மாவின் முழுப் பெயர் நம்பூரி தாக்குர் திலக் வர்மா. அவரது அப்பா நம்பூரி நாகராஜு, ஒரு எலக்டிரீஷியன். அவரது அம்மா காயத்ரி தேவி. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் வீர்ராக வேண்டும் என்பதுதான் திலக் வர்மாவின் விருப்பம். இதற்கு காரணம் சச்சின் டெண்டுல்கர். சிறுவயதில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்க்கும் திலக் வர்மாவுக்கு அவரைப் போல தானும் சிறந்த கிரிக்கெட் வீர்ராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். எந்த நேரமும் கிரிக்கெட்டைப் பற்றியே பேசும் திலக், தூங்கும்போதுகூட தன் படுக்கையின் ஓரத்தில் கிரிக்கெட் பேட்டை வைத்திருப்பார். அந்த அளவுக்கு ஒரு கிரிக்கெட் பைத்தியமாக இருந்திருக்கிறார் என்கிறார் அவரது அப்பா நாகராஜு.

ஹைதராபாதின் லிங்கம்பள்ளியில் உள்ள லேகாலா கிரிக்கெட் பயிற்சி மையத்தில்தான் திலக் வர்மா முதன்முதலில் கிரிக்கெட் பயிற்சி பெற்றிருக்கிறார். அங்குள்ள பயிற்சியாளரான சலாம் பாயாஷ்தான் திலக் வர்மாவின் முதல் கிரிக்கெட் ஆசிரியர். 7 வயது முதல் திலக் வர்மாவுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்த ஆசிரியரான பாயாஷ் கூறும்போது, “சிறுவயது முதலே தனது கிரிக்கெட் கனவுகள் நனவாக திலக் வர்மா கடுமையாக உழைத்தார். சச்சின், சுரேஷ் ரெய்னா ஆகியோரை திலக் வர்மாவுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். உள்ளூரில் நடக்கும் டிவிஷனல் போட்டிகளில் சதம் அடித்தால் அவரது ஆசையை நிறைவேற்றுவதாக கூறினேன். அவனும் சதம் அடித்தான்.

இதைத்தொடர்ந்து அவனுக்கு ஐபிஎல் தொடர்களின்போது பவுண்டரிக்கு வெளியில் செல்லும் பந்துகளை எடுத்துப் போடும் பால் பாயாக பணியாற்றும் வாய்ப்பை பெற்ருக் கொடுத்தேன். சிஎஸ்கே மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ரெய்னாவை சந்திக்க அவனுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அப்போது அவன் ரெய்னா காலில் விழுந்து ஆசி வாங்கினான். பிறகு அவனது மற்றொரு கனவு நாயகனான சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அனியில் இடம்பிடித்தான், அதன்மூலம் யாரை ரோல் மாடலாக நினைத்தானோ, அவரிடமே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிட்ட்து. எந்த கட்டத்திலும் பயப்படாமல் ஆடுவது திலக் வர்மாவின் ஸ்டைல். அதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் நாயகனாக மின்ன அவனுக்கு கைகொடுத்திருக்கிறது” என்கிறார்.

உலகக் கோப்பையில் ஆடுவாரா?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் திலக் வர்மாவை ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீர்ர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்…

திலக் வர்மா ஒரு இடது கை பேட்ஸ்மேன்:

இந்திய கிரிக்கெட் அணியில் இப்போது இடதுகை பேட்ஸ்மேனுக்கு பற்றாக்குறை இருக்கிறது. ரோஹித் சர்மா, சுப்மான் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதன், ஹர்த்திக் பாண்டியா என்று இப்போதைக்கு அணியின் முதல் 6 இடங்கலில் ஆடக்கூடிய அனைவரும் வலதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஒரு இடதுகை பேட்ஸ்மேன்கூட இல்லை. இது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. எல்லோரும் வலதுகை பேட்ஸ்மானேனாக இருந்தால் எதிரணி பந்துவீச்சாளர்கள் லைன் அண்ட் லெங்க்த்தை மாற்றாமல் எளிதாக பந்துவீசி நம் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்க முடியும். இடதுகை பேட்ஸ்மேனான திலக் வைர்மாவை பேட்டிங் லைனப்பில் சேர்த்தால் இந்த நிலையை மாற்றலாம்..

4-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கலாம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே 4-வது பேட்ஸ்மேன் என்று யாரும் செட் ஆகவில்லை. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் என்று பல பேட்ஸ்மேன்களை மாற்றி மாற்றி களம் இறக்கியும், அவர்களால் அந்த இடத்தில் சிறப்பாக ஆட முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 4-வது பேட்ஸ்மேனாக திலக் வர்மா சிறப்பாக ஆடுவதால், அந்த இடத்தில் அவரை பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக அந்த இடத்தில் ஆடக்கூடிய ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அவர்களுக்கு பதில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கருத்து.

அட்டகாசமான பேட்டிங் ஃபார்ம்:

கடந்த சில மாதங்களாகவே உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார் திலக் வர்மா. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமல்ல, அதற்கு முன்பு நடந்த ஐபிஎல் தொடரிலும் அவரது ஃபார்ம் உச்சத்தில் இருந்துள்ளது. இந்த ஆண்டில் ஆடிய 14 இன்னிங்ஸ்களில் 84(46), 22(18), 41(29), 30(25), 37(17), 3(4), 2(3), 29(21), 26(10), 26(22), 43(14), 39(22), 51(41), 49(37) என்று ஏகப்பட்ட ரன்களைக் குவித்த்தால் அவரது தன்னம்பிக்கை உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் அவரை பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கு நல்லது என்பது முன்னாள் வீர்ர்களின் கருத்தாக உள்ளது.

மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்தியா சொதப்பினாலும், திலக் வர்மா என்ற ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...