No menu items!

சைவம் Vs அசைவம் – Infosys சுதா ராமமூர்த்திக்கு எழுந்த எதிர்ப்பு!

சைவம் Vs அசைவம் – Infosys சுதா ராமமூர்த்திக்கு எழுந்த எதிர்ப்பு!

மீண்டும் இண்டர்நெட் ஆசாமிகளின் கோபத்துக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார் சுதா மூர்த்தி. யார் இவர் என்று கேட்கும் அப்பாவிகளுக்கு சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமியார். கதாசிரியர். சமூக சேவை செய்பவர். இப்படி பல அடையாளங்கள் சுதா மூர்த்திக்கு உண்டு. இந்த அடையாளங்களுடன் சமூக ஊடகங்களில் தாக்கப்படும் நபர் என்ற பிம்பமும் சுதாவுக்கு உண்டு.

கோடீஸ்வர சுதா மிக எளிமையானவர் என்ற பிம்பம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கிண்டலடிக்கப்படும். இந்த வருடம் மார்ச் மாதம் ஊடகங்களில் ஒரு படம் பேசு பொருளாக மாறியது. அந்தப் படத்தில் கோடீஸ்வர சுதா மூர்த்தி ஒரு விறகு அடுப்புக்கு அருகே அமர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார்.

திருவனந்தபுரத்தில் ஒரு கோவிலில் எடுக்கப்பட்ட படம். ஆஹா என்ன எளிமை என்று ஒரு கூட்டம் கொண்டாட மறு கூட்டம் அவரை கிண்டல் செய்தது. விறகு அடுப்புக்கு பக்கத்தில் போஸ் கொடுத்தால் அது எளிமையா என்று கேலி செய்தது. இந்தியாவில் எத்தனை பெண்கள் விறகு அடுப்பு பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா என்ற கேள்வியையும் எழுப்பினர்.

இண்டர்நெட் முழுவதும் சுதா மூர்த்தியின் எளிமை கதைகள் பரவி கிடக்கின்றன. அதற்கு சமமாக அந்த எளிமை கதைகளின் பகடிகளும் கொட்டிக் கிடக்கின்றன. தான் எளிமையானவள் என்ற பிம்பத்தை சுதா தொடர்ந்து கட்டமைத்து வருகிறார். இது ரொம்ப அலுப்பைத் தருகிறது என்கிறார்கள் சுதாவின் எதிர்ப்பாளர்கள்.

நேற்று மற்றொரு சம்பவத்தை செய்திருக்கிறார் சுதா. இது அவரது உணவு முறையிப் பற்றியது. ‘நான் என் பணி சார்ந்த விஷயங்களில் துணிச்சலாய் சாகசங்கள் செய்வேன். ஆனால் உணவில் அப்படியில்லை. நான் சுத்த சைவம். முட்டை, பூண்டு கூட சாப்பிட மாட்டேன். சைவ உணவுகளுக்கும் அசைவ உணவுகளுக்கும் ஒரே கரண்டியை பயன்படுத்துவார்களோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. அதனால் நான் வெளிநாடுகள் போகும்போது சுத்த சைவ ஓட்டல்களைத் தேடிப் போவேன். அது மட்டுமில்லாமல் என் பையில் சுத்த சைவ உணவுகள் இருக்கும். சப்பாத்திகள், ரவை சொஜ்ஜி போன்றவையை வைத்திருப்பேன். சுடு நீர் கலந்தால் போதும். ஒரு பையில் சின்ன குக்கரும் வைத்திருப்பேன். என் பாட்டியும் இது போன்று ஒரு பை வைத்திருப்பார்’ என்று சமீபத்தில் ஒரு யூடியுப் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

இது சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. சைவத்துக்கும் அசைவத்துக்கும் ஒரே கரண்டியை பயன்படுத்துவார்கள் என்று சுதா சொன்னது பலரை கடுப்பாக்கிவிட்டது.

அப்படியென்றால் இங்கிலாந்து பிரதமராக இருக்கும் இவரது மருமகன் வீட்டுக்குச் சென்றால் இவருக்கென்று தனிப் பாத்திரங்களை பயன்படுத்துவார்களா? அவர்களுக்கு சமைத்த பாத்திரங்களில் இவருக்கு சமைக்க மாட்டார்களா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. மாமிச வகை தட்டுக்களுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் நிற்கும் புகைப்படங்களையும் கேள்விகளுடன் இணைத்திருந்தார்கள்..

உணவு ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அவர் சுத்த சைவமாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று சுதாவுக்கு ஆதரவாக எதிர் கேள்விகளும் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஒரு வயதானவர் தனக்கான உணவை தானே கொண்டு செல்வதில் என்ன தவறு என்று சுதாவின் ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

கரண்டி விவகாரம் சாதிய விவகாரமாகவும் மாறிக் கொண்டு வருகிறது. இது நவீன தீண்டாமை என்று சுதாவின் எதிர்ப்பாளர்கள்.

இண்டர்நெட் யுகத்தில் பிரபலமாய் இருப்பது மிகவும் கடினம். எந்தப் பக்கம் போனாலும் அடி விழும் என்பதற்கு சுதா ஒரு உதாரணம்.

2 COMMENTS

  1. I am a vegetarian. I lived abroad for a decade. I had this fear too that I would be served with the same spoon. I think only a vegetarian could understand this.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...