No menu items!

சமந்தாவின் Ice Bath

சமந்தாவின் Ice Bath

ஆட்டோஇம்யூன் பிரச்சினையான மையோசிடிஸ்ஸினால் பாதிக்கபப்ட்டிருக்கும் சமந்தா, இப்போது ஆறு மாதம் கட்டாய ஓய்வில் இருக்கிறார். இந்த பிரச்சினையில் இருந்து முழுமையாக குணமடைய, அமெரிக்கா மற்றும் கொரியாவில் சிகிச்சைகளை எடுத்து கொள்வதற்குதான் இந்த ப்ரேக்.

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொள்வதற்கு முன்பு மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக இந்தோனேஷியாவுக்கு பறந்திருக்கிறார்.

இந்தோனேஷியாவின் பாலி நகரத்தின் இயற்கை அழகா இல்லை சமந்தா அழகா என்று குழப்பும் வகையில் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் சூட்டைக் கிளப்பிகொண்டிருக்கிறார்.

அந்தவகையில், சமந்தா செய்திருக்கும் காரியம் இதயத்தை சில்லிட வைத்திருக்கிறது.

4 டிகிரி செல்சியஸ் குளிரில் கொஞ்சம் கூட பதறாமல் நடுநடுங்காமல், குறைந்தப்பட்ச ஆடையில் ஆறு நிமிடம் ஐஸ் பாத் எடுத்திருக்கிறார் சமந்தா.

இப்படி ஐஸ் பாத் எடுப்பது உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒரளவிற்கு நிவாரணம் கொடுக்கிறதாம்.

இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு தீரன் அதிகாரம் ஒன்று பட நாயகி ரகுல் ப்ரீத்சிங்கும் இப்படியொரு ஐஸ் பாத் எடுத்து இணையத்தை அதிர வைத்தார்.


கொளுத்திப் போட்ட பவன்கல்யாண். கொந்தளிக்கும் ஃபெப்சி!

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி. இவருக்கு இங்கே அஜித்திற்கு இருப்பது போல் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

சினிமாவில் இருக்கும் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியையும் நடத்துகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இவரது கட்சி ஏதாவது ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், இவர் நடித்திருக்கும் ‘ப்ரோ’ படத்தின் அறிமுக விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் ’ப்ரோ’ பட இயக்குநர் சமுத்திரக்கனியும் மேடையில் இருக்கும் போது, ‘தமிழ்ப்படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும்தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதிய விதியை பற்றி கேள்விப்பட்டேன். இது போன்ற குறுகிய மனப்பான்மையில் இருந்து தமிழ் சினிமா வெளிவர வேண்டும். அப்போதுதான் ஆர்.ஆர்.ஆர். மாதிரியான உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால தர இயலும்.’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் பவன் கல்யாண்.

தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டமைப்பான ஃபெப்சி சமீபத்தில்தான் இப்படியொரு அறிவிக்கையை வெளியிட்டது.

இதற்கு காரணம், விஜய் மற்றும் அஜித் உள்பட முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களின் பட ஷூட்டிங்குகள் ஹைதராபாத்தில்தான் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன. ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டி அல்லது ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் ஷூட் செய்யப்படுகின்றன.

இதனால் தமிழ் நடிகர்கள், ஒரு சில தொழில்நுட்ப கலைஞர்களைத் தவிர்த்து லைட்மேன் உட்பட இதர தொழில்நுட்ப கலைஞர்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். இதனால் இங்குள்ள ஃபெப்சி கலைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், வருமானம் பறிப்போகிறது. இந்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

இதை மனதில் கொண்டே, இங்குள்ளவர்களுக்கு வருமானம் வேண்டும் வேலை வேண்டும் என்றே ஃபெப்சி இப்படியொரு அறிவிக்கையை வெளியிட்டது.

ஆனால் ரஜினி, கமல், விஜய் அஜித் மாதிரி பெரிய ஹீரோக்களின் ஷூட்டிங்கை இங்கே வைத்தால் ரசிகர்களின் தொல்லை அதிகம் இருக்கிறது. சுதந்திரமாக ஷூட்டிங்கை நடத்த முடியவில்லை. இழப்புகள் அதிகமிருக்கிறது. அதனால்தான் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

நடைமுறை சிக்கல்கள் இருபக்கம் இருந்தாலும், அதை குறுகிய மனப்பான்மை என்று பவன் கல்யாண் கூறியிருப்பது, ஃபெப்சி அமைப்பை சீண்டிப் பார்ப்பதாக இருக்கிறது என்ற கொந்தளிப்பு கிளம்பியிருக்கிறது.


நயா பைசா வாங்காமல் நடித்த விஜய்?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற கெத்துடன் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

ஆனால் அந்த ரஜினிகாந்தும் இடையில் இரண்டு சுமாரான படங்களைக் கொடுத்ததால், சம்பளத்தை குறைத்து கொண்டு இரண்டுப் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதற்கிடையில் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த விஜயின் அடுத்த இரண்டுப்படங்கள் சுமாராக ஓடினாலும் வசூலில் நன்றாகவே லாபம் கொடுத்தன.

இதனால் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் முன்னணியில் இருக்கிறார்.
இப்படி அதிகம் சம்பளம் வாங்கும் விஜய், ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்தார் என்றால் ஆச்சர்யமான செய்தியாக இருக்கும்.

விஜயை வைத்து ’மெர்சல்’ மற்றும் ‘தெறி’ படங்களை இயக்கிய அட்லீ, இப்போது பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீயுடன் இருக்கும் நட்பின் காரணமாக விஜய் இப்படத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஷாரூக்கானும், விஜயும் தோன்றும் காட்சிகள் ஆக்‌ஷன் அதிரிபுதிரியாக இருக்கும் என அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

விஜய் சம்பளம் வாங்காமல் நடித்தாரா என்பது ‘ஜவான்’ பட ப்ரமோஷனின் போது ஷாரூக்கான் சொன்னால்தான் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...