No menu items!

அரசியல்வாதிகளை கிழிக்கும் கமல்! – தென்னாப்பிரிக்காவில் இந்தியன் 2

அரசியல்வாதிகளை கிழிக்கும் கமல்! – தென்னாப்பிரிக்காவில் இந்தியன் 2

தென்னாப்ரிக்கா கிளம்புவதற்கு கமலும், ஷங்கரும் தயாராகிவிட்டார்கள்.

படத்தில் இடம்பெறும் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை இங்கே எடுப்பதற்கான வேலைகள் மளமளவென நடைபெற்று வருகின்றன.

அநேகமாக இந்த ஆக்‌ஷன் காட்சியில் கமல் சீறிப்பாயும் ட்ரெயின் மீது நின்றபடி, ஓடியபடி சண்டையிடும் காட்சியாக இருக்கலாம் என தெரிகிறது. இதற்காக தென்னாப்பிரிக்கா அரசிடம் முறையனான அனுமதி வாங்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த பரபரப்பை விட வேறொரு சூடான விஷயம் ’இந்தியன்2’ படத்தில் இருப்பதாக ஷங்கர் வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.

வழக்கமாகவே ஷங்கரின் படங்களில் லஞ்சம் குறித்தும் அதை வாங்கும் அரசியல்வாதிகளையும் கிழித்து தொங்கவிடும் வசனங்கள் இருக்கும். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’ படங்களில் லஞ்சம் குறித்து தனது பாணியில் காட்சிகளையும், அதற்கான சுறுக் வசனங்களையும் வைத்திருப்பார் ஷங்கர்.

முன்பு ’இந்தியன்’ திரைப்படம் வெளியான போது கமல் அரசியலில் களம் காணவில்லை. ஆனால் இப்பொழுது கமல் இயங்கும் சூழலே வேறு மாதிரியாக மாறியிருக்கிறது.

தனக்கு கிடைத்த ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மேடையையே தனக்கான அரசியல் பரப்புரை தளமாக மாற்றியவர் கமல். அதேபோல் இந்த முறை இந்தியன் படத்திலும் அரசியல்வாதிகளைக் கிழித்து தொங்கவிடும் எண்ணத்தில் இருக்கிறாராம் கமல்.

அதற்கு ஏற்றவகையில், ஷங்கரும் தன் பங்கிற்கு லஞ்சத்திற்கு எதிராகவும், சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் கடுமையாக சாடும் வசனங்களை படம் நெடுக வைத்திருக்கிறாராம்.

கமல் + ஷங்கர் கூட்டணி இந்த முறை இப்பொதுள்ள தென்னிந்திய அரசியல்வாதிகளைக் கடுமையாக தாக்கும் வகையில் காட்சிகளை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இதனால் இந்தியன்2 படம் சென்சாருக்கு போகும் போதே சர்ச்சைகள் கிளம்பலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்.

#Indian2, #Kamal, #Shankar, #SouthAfrica,#Kajal, #RakulPreetSingh, #AnirudhRavichander, #PriyaBhavaniShankar, #Siddharth, #BobbySimha, #GuruSomasundaram,


தாப்ஸி மட்டும் பலிகடாவா? – லஷ்மி நெக்லெஸ் பிரச்சினை!

இந்தியா முழுவதிலும் இன்றைக்கு தாப்ஸிதான் வைரல்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த லாக்மே ஃபேஷன் வீக் ஷோவில், மார்பழகை தாராளமாக காட்டியபடி, சிவப்பு நிற உடையில் ஒய்யாரமாக ’கேட் வாக்’ போனார் தாப்ஸி. அவ்வளவுதான் இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது சர்ச்சை.

தாப்ஸி கேட் வாக் போனதுமே சர்ச்சை எழவில்லை. ஆனால் அந்த கேட் வாக் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் எல்லோரும் தாப்ஸியின் அழகைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

ஆனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான மாலினி கெளரின் மகன் ஏகவல்யா சிங் கெளர், தாப்ஸி மீது ஒரு புகார் ஒன்றை கொடுத்தார்.

தாப்ஸி அணிந்திருந்த நெக்லெஸில் இந்துக் கடவுளான லஷ்மியின் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்படியொரு அரைகுறை ஆடையில், இந்துக் கடவுளை நகை அணிந்தது இந்துக்களை புண்படுத்துவது போல இருக்கிறது. ஹிந்த் ரக்‌ஷக் சங்கதனின் இந்துமதம் சார்ந்த சென்டிமெண்ட்களை காயப்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்ல சர்ச்சை ஆரம்பித்துவிட்டது.

இதையடுத்து மத்திய பிரதேச காவல்துறை உடனடியாக தாப்ஸி மீதான புகாரை கையிலெடுத்து கொண்டிருக்கிறது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையையும் ஆரம்பித்துவிட்டது.

இந்த பிரச்சினையின் மறுபக்கம், தாப்ஸியை மட்டும் பலிகடாவாக்குவதில் என்ன நியாயம் இருக்கிறது. தாப்ஸி அணிந்திருந்த அந்த லக்‌ஷி உருவம் வடிவமைக்கப்பட்ட நெக்லெஸ் ரிலையன்ஸ் ஜூவல்ஸ் நிறுவனத்தின் அட்சய திரிதியை கலெக்‌ஷனில் உள்ளது. அதைதான் தாப்ஸி அணிந்தார். அது தவறு என்றால் அந்த நெக்லெஸ்ஸை வடிவமைத்தவர் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை. அதை விற்கும் ரிலையன்ஸ் ஜூவல்ஸ் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்ற கேள்விகள் இப்பொழுது எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

#Taapsee, #LakmeFashionweek, #GoddessLakshmi, #HindRakshakSangathan,. #MaliniGaur, #EklavyaSinghGaur ,#RelianceJewels, #AkshayaTritiya,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...