No menu items!

கலைஞர் 100 சிறப்புப் பேட்டி – கண்ணீர் விட்ட கவிஞர் வைரமுத்து

கலைஞர் 100 சிறப்புப் பேட்டி – கண்ணீர் விட்ட கவிஞர் வைரமுத்து

கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி…

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. கலைஞர் இருந்தவரை தினமும் ஒருமுறை உங்களுடன் பேசிவிடுவார் என்று கூறப்படுவதுண்டு. இப்போது அந்த தொலைபேசி அழைப்புகள் இருக்காது. கலைஞரை நீங்கள் எந்த அளவு மிஸ் செய்கிறீர்கள்?

கலைஞர் நூற்றாண்டு என அழகாக சொல்கிறீர்கள், இந்த நூற்றாண்டே கலைஞருடையது என்பது என் கருத்து.

கடந்த நூற்றாண்டை அதிகம் பாதித்த தமிழர்கள் என்று சிலரை பட்டியலிட்டால் அதில் தலையாயவர் கலைஞர். எல்லா அரசியல் தலைவர்களின் நீண்ட கால பணியில் எத்தனை ஆண்டுகள் அவர்கள் நின்றார்கள், வென்றார்கள், பங்களிப்பு செய்தார்கள் எனக் கணக்குப் போட்டு பார்த்தால், சிலர் 30 ஆண்டுகள், சிலர் 25, சிலர் 20, சிலர் 15, சிலர் 10 ஆண்டுகள் என்றுதான் தங்கள் வாழ்வில் ஒளி வீசியிருக்க முடியும், உச்சத்தில் இருந்திருக்க முடியும். காரணம், அவர்களின் திறமையும் அவர்களின் தேவையும் அவ்வளவுதான். காலத்த்தின் தேவையை ஈடுகட்டுவதற்கு அவர்களிடம் என்ன பருப்பொருள் இருந்தது என்று பார்த்தால், அவர்களின் தேவையை ஈடுகட்டிவிட்டு அவர்கள் சூனியமாகிவிடுகிறார்கள், விலகிவிடுகிறார்கள் அல்லது விலக்கப்படுகிறார்கள். கலைஞரை விலக்கவே முடியாது, அவர் விலகி இருக்கவும் முடியாது. காரணம், அவரது பன்முகப் பேராற்றால்.

ஒரு மனிதன் மூன்றால் ஆக்கப்பட்டிருக்கிறான். எண்ணம், சொல், செயல். எண்ணம்… எழுதிக்கொண்டே இருப்பார். சொல்… மருத்துவமனை செல்வது வரைக்கும் பேசிக்கொண்டே இருந்தார். செயல்… இயங்கிக்கொண்டே இருந்தார். அவரது வாழ்வியல் என்பது செயல்பாடுதான்.

அரசியல், திரைத்துறை, இயக்கம்… இப்படி எல்லா தளங்களிலும் தன் தேவை இருக்குமாறு பார்த்துக்கொண்ட அல்லது தேவையை ஈடுகட்டுமாறு நடந்துகொண்ட ஒரு தலைவரை இந்த நூற்றாண்டில் பார்ப்பது அரிது. அண்ணாவுக்கு அது இருந்தது; ஆனால், அவருக்கு ஆயுள் மறுக்கப்பட்டது. பெரியாருக்கு ஆயுள் இருந்தது; ஆனால், அவர் தன்னை ஒரு கருத்தாளர் என்று மட்டும்தான் சொல்லிக் கொண்டார். ‘நான் எழுத்தாளனும் அல்ல, பேச்சாளனும் அல்ல, கருத்து சொல்ல பிறந்தவன்’ என்றுதான் அவர் சொல்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் எந்த துறையில் வெற்றிடம் இருந்தாலும், வெற்றிடத்தை காற்று ஓடிச் சென்று நிரப்புவது போல், கலைஞர் நிரப்பினார். அதனால்தான் இன்று எழுத்துறையிலும் பேசப்படுகிறார், கலைத்துறையிலும் பேசப்படுகிறார், அரசியல்துறையிலே பேசப்படுகிறார், ஆட்சித் துறையிலே பேசப்படுகிறார்… லட்சியமாக பேசப்படுகிறார், மொழியாக பேசப்படுகிறார்.

பன்னூறு ஆண்டுகளின் காவியங்களை தன்னகத்தே கொண்ட, மூவாயிரம் ஆண்டுகளாக இயங்கிக்கொண்டே இருக்கிற, இன்னும் அழியாமல் இருக்கிற, பேச்சுமொழி ஆகிப்போகும் விபத்து நேராமல் இருக்கிற; இரண்டாம் நூற்றாண்டில் எம் புலவன் பேசிய அதே அதே மொழியை, அதே ஒலியை  இன்னும் கொண்டிருக்கிற தமிழ் மொழியை செம்மொழி என்று செய்த அந்த பெருமைக்காக கலைஞரை இன்னும் பல நூற்றாண்டுகள் தமிழ் நினைவு கூறும். 

இந்த நூற்றாண்டு கலைஞருடையது என்று சொன்னேன்… இன்னும் பல நூற்றாண்டுகள் அவருடையதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஆட்சி, அரசியல், சினிமா, இலக்கியம், குடும்பம் –  என அனைத்தையும் கலைஞர் பேலன்ஸ் செய்தவிதம் இன்றும் வியந்து பேசப்படுகிறது. எப்படி இதனை அவர் செய்தார்?

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...