No menu items!

கார்த்தி Vs ஆர்யா

கார்த்தி Vs ஆர்யா

இப்போது சீக்குவல், ப்ரீக்குவல் படங்களுக்கு நல்ல வியாபாரம் இருப்பதால், பழைய ஹிட் படங்களின் சீக்குவல்களை எடுக்க ரூம் போட்டு யோசித்துவருகிறார்கள் ஹிட் கொடுக்க போராடிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள்.

’வாரியர்’ மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் லிங்குசாமியும் இந்த சீக்குவல் பாணிக்கு மாற திட்டமிட்டு வருகிறார்.

லிங்குசாமி இயக்க, கார்த்தியும், தமன்னாவும் ஜோடி சேர்ந்து நடித்த ’பையா’ சூப்பர் டூப்பர் ஹிட் படம். இதன் சீக்குவலை எடுக்கலாம் என அதற்கான வேலைகளில் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் இறங்கி விட்டது.

கார்த்திக்குப் பதில் ஆர்யா, தமன்னாவுக்குப் பதில் பூஜா ஹெக்டே என திட்டமிட்டு இருந்தார்கள். மேலும் பையாவின் தொடர்ச்சியாக எடுக்கலாமா அல்லது பையா-2 என டைட்டிலை வைத்துவிட்டு வேறொரு கதையை எடுக்கலாமா என்றும் தீவிரமாக யோசித்து வருகிறார் லிங்குசாமி.

இந்நிலையில், பையா-2 படத்தில் கார்த்தி நடிக்க வாய்ப்புகள் உருவாகி வருவதாக கூறுகிறார்கள். அதாவது திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்திற்குப் பதிலாக, ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, கார்த்தி மீண்டும் நடிக்க பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறதாம்.

அதேநேரம் கார்த்தி கமிட்டானால் பூஜா ஹெக்டேவுக்கு ஹீரோயினாக வாய்ப்புகள் அதிகம். அதேநேரம், ஆர்யாவுக்கான வாய்ப்பு பறிப்போய்விடும். ஆனால் கார்த்தியா ஆர்யாவா என்பது முடிவாக இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்கிறது திருப்பதி ப்ரதர்ஸ் வட்டாரம்.

கார்த்தி பையா-2 படத்தில் நடித்தால், அதன் பிறகு தொடர்ந்து சீக்குவல் நாயகன் கார்த்தி என்ற பட்டத்தையே கொடுக்கலாம். காரணம் பொன்னியின்செல்வன், பையா, கைதி என அடுத்தடுத்து சீக்குவல் படங்களில் நடிக்கும் நாயகன் இவர்தான்.


உச்சம் தொட்ட சூர்யா!

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக அதிகமான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம்தான் ‘கங்குவா’. சிறுத்தை சிவா இப்படத்தை ‘அண்ணாத்த’ படத்திற்குப் பிறகு இயக்கி வருகிறார்.

இப்படம் வரலாற்றுப் பின்னணியில் நடைபெறும் படம் என்பதால், அதற்கான பிரம்மாண்டமான செட்கள், ஏகப்பட்ட நடிகர் நடிகைகள், ஷூட் செய்வதற்கு கடினமான சில லொகேஷன்கள், எக்கச்சக்கமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் என ‘கங்குவா’ ஷூட்டிங் இழுத்து கொண்டே போகிறது.

இதனால் 2024, ஜனவரி குடியரசு தின வார இறுதி விடுமுறை நாட்களில் இப்படத்தை வெளியிடலாம் என்று சூர்யாவும், சிவாவும் போட்ட திட்டம் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறதாம். படத்தின் ஷூட்டிங் இழுத்துக்கொண்டே போவதால், ரிலீஸை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கலாம் என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாம். சூர்யா சொன்னதைப் பார்த்தால், இப்படம் 2024 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ‘கங்குவா’ வெளியாகலாம் என தெரிகிறது.

’கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது என்றே தெரியவிட்டாலும் கூட, இப்படத்திற்கு வியாபாரம் நன்றாக நடப்பதாக கங்குவா குழுவில் பேச்சு அடிப்படுகிறது. இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமைகளை அமேசன் ப்ரைம் வீடியோ பெரும் தொகைக்கு கைப்பற்றி இருக்கிறது. டிஜிட்டல் உரிமை சுமார் 80 கோடிகள் என்று கூறுகிறார்கள். இதில் ஹிந்தி உரிமையை தயாரிப்பாளர் அமேசானுக்கு விற்கவில்லை. ஹிந்தி உரிமையை தயாரிப்பாளர் தரப்பே வைத்திருக்கும் என்கிறார்கள்.

இதன் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவில் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட தமிழ்ப்படம் என கங்குவா டிஜிட்டல் உரிமைகள் பந்தயத்தில் முந்தியிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் விஜயின் ‘லியோ’ படத்தின் டிஜிட்டல் உரிமைகளுக்கு கொடுத்த விலைதான் அதிகப்பட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குநராகும் சிம்ரன்!

சிம்ரனுக்கு இப்போது நடிப்பது போரடித்துவிட்டதாம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதில் சுவாரஸ்யமே இல்லை என்கிறார்.

இதனால் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவரை, டைரக்டராக களமிறங்குமாறு அவரது கணவர் தீபக் பாஹா கூறுகிறாராம்.

இதனால் இயக்குநராகும் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் சிம்ரன்.

டெல்லியில் இருந்தவாறே கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கும் சிம்ரன், வித்தியாசமான கதைகள் இருந்தால் மட்டுமே கேட்கிறார். அதுவும் இன்றைக்கு உள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துவருகிறார். குறிப்பாக உணர்வுப்பூர்வமான, இக்காலத்து உறவுகளைப் பற்றிய கதைகளை சிம்ரன் ஆர்வத்துடன் கேட்கிறார்.

சிம்ரன் கதை கேட்பது குறித்து கேள்விப்படும் உதவி இயக்குநர்கள் அவரது ஷூட்டிங் எப்போது சென்னையில் நடக்கும் என விசாரித்தபடியே இருக்கிறார்கள். டெல்லிக்கு செல்ல முடியாத்தால் அவர் ஷூட்டிங்குக்கு வரும் போது, நேரில் கதை சொல்லிவிடலாம் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...