No menu items!

ஹீரோயின் போட்டியில் தனுஷ் & சிம்பு!

ஹீரோயின் போட்டியில் தனுஷ் & சிம்பு!

சிம்பு, தனுஷ் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்க வருவதற்கு முந்தைய காலத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் உள்பட பல பிரபல ஹீரோயின்களுடன் நடித்த ஹீரோவாக எல்லோரையும் பொறாமைப் பட வைத்தவர் பிரஷாந்த்.

உலக அழகியாக கொண்டாடப்பட்ட ஐஸ்வர்யா ராய் உடன் அப்போதே நடித்தார். பாலிவுட்டில் மவுசு அதிகமிருந்த அமீஷா பாட்டீலுடன் நடித்தார். இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

ஆனால் இவருக்குப் பின்னால் வந்த ஹீரோக்களுக்கு, அந்த வாய்ப்பு பெரியளவில் எதுவும் செட்டாகவில்லை. காரணம் பாலிவுட்டில் கிடைக்கும் சம்பளம் மற்றும் மார்க்கெட்டில் கிடைக்கும் மவுசு.

ஆனால் பான் – இந்தியா என்ற ட்ரெண்ட் இப்போது எல்லாவற்றையும் மாற்றிவிட்டிருக்கிறது.

நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆலியா பட், திபீகா படுகோன் தெலுங்குப் படங்களிலும், கங்கனா ரனவத் தமிழ்ப்படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இந்த ஹீரோ – ஹீரோயின் ஜோடியை வைத்து சந்தையில் படத்தை நல்ல விலைக்கு விற்க முடியுமென்பதால் பாலிவுட் ஹீரோயின்களை இங்கே நடிக்க வைக்கும் வேலைகள் இப்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் தனுஷூக்கும், சிம்புவுக்கும் இடையில் கடும்போட்டி நிலவுகிறதாம். தனுஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப்படங்களில் நடித்து வருகிறார். சிம்புவோ எப்பவாவது படம் பண்ணவேண்டுமென நினைத்தால் தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார்.

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது. சிம்பு படத்திலேயே அதிகப்பட்ச பட்ஜெட்டாக 100 கோடி பட்ஜெட்டில் பான் – இந்தியா படமாக ராஜ் கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறதாம்.

சிம்புவுக்கு தமிழ் சினிமாவை தவிர மற்ற மொழிகளில் பெரிய மார்கெட் எதுவும் இல்லை. இதனால் போட்ட முதலீட்டை எடுக்க, வியாபார ரீதியாக ஏதாவது செய்தாக வேண்டும். இதனால் யாரை ஹீரோயினாக நடிக்க வைப்பது என்பது குறித்தே பெரும் கலந்துரையாடல் நடைபெற்றதாம். இறுதியில் திபீகா படுகோனை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கும் வகையில் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.

மறுபக்கம், தனுஷ் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆனந்த் . எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இருவர் கூட்டணியில் ஏற்கனவே Raanjhana, Aatrangi Re என இருப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனுஷ் – ஆனந்த் .எல். ராய் மீண்டும் இணையவிருக்கும் இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பாலிவுட்டின் கியாரா அத்வானியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.

யார் எந்த ஹீரோயினுடன் நடிக்கப் போவது என்பதில் ஒரு மறைமுகப் போட்டி நிலவுவது குறித்துதான் இப்போது தமிழ் சினிமாவில் அரட்டை தொடங்கியிருக்கிறது.


இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்!

இந்திய சினிமாவில் இன்றைய நிலவரப்படி அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தால், பட்டென்று உங்கள் கண்களுக்குள் வந்து நிற்கும் முகம் ஏ.ஆர். ரஹ்மானாக இருக்க முடியும்.

உண்மைதான். இந்திய சினிமாவில் ’அதிக சம்பளம் வாங்கிய’ இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்தான். அப்படியானால் ’அதிக சம்பளம் வாங்கும்’ இசையமைப்பாளர் யார் என்றால், அதுவும் நம்ம தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்தான். அனிருத் ரவிச்சந்திரன்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாமல் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ஒப்புக்கொள்கிறார். இதனால் ரஹ்மான் படங்கள் முன்பு போல் இப்போது அதிகம் வெளிவருது இல்லை.

அனிருத்தின் சம்பளம் கிடுகிடுவென உயர்வதற்கு மூன்று காரணங்களை முன்வைக்கப்படுகின்றன. முதல் காரணம், அடுத்தடுத்த ஹிட் படங்களும், தமிழ் சினிமா என்ற எல்லையைத் தாண்டி இவரது ட்யூன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து, இன்றைய இளசுகளின் மனத்திற்கேற்ற பாடல்கள், மூன்றாவதாக, சினிமாவை தாண்டி மேடை நிகழ்ச்சிகளில் மாஸ் காட்டுவதாலும், இன்று அனிருத்தின் மார்க்கெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

32 வயதில் இன்று 10 கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகி இருக்கிறார் அனிருத். பாலிவுட்டில் ’ஜவான்’ படம் மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் அனிருத்திற்கு இப்போது ஏறுமுகம் என்கிறது வாயடைத்துப் போய் இருக்கிறது கோலிவுட் வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...