No menu items!

நிலா நாயகன்: யார் இந்த வீரமுத்துவேல்?

நிலா நாயகன்: யார் இந்த வீரமுத்துவேல்?

உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. சந்திரயான் 3 வெற்றி மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய அணியின் தலைவன், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஒரு தமிழர்!

யார் இந்த வீரமுத்துவேல்?

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவரே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது…

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் விழுப்புரத்தில்தான். அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நான் ஒரு சராசரி மாணவன். பள்ளிப் படிப்புக்கு பிறகு என்ன படிக்கவேண்டும் என்று எந்த திட்டமும் எனக்கு இல்லை. எனக்கு யோசனை சொல்லும் அளவுக்கு என் பெற்றோரும் அதிகம் படித்தவர்கள் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ மெக்கானிக்க்ல் இன்ஜினிரிங் சேர்ந்தேன். முழு ஈடுபாட்டுடன் படித்ததால் என்னால் 90 சதவீதம் மதிப்பெண் எடுக்க முடிந்தது.

மெரிட்டில் ஸ்ரீசாய்ராம் என்ஜினிரியங் கல்லூரியில் பிஇ சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிடலும், முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன். அதற்காக நான் எப்போதும் படித்துக்கொண்டு இருக்க மாட்டேன். அதேநேரத்தில் படிக்கும்போது, அதில் 100 சதவீதம் ஈடுபாடு காட்டுவேன். புரிந்து படிக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தந்தது.

பிஇ மாதிரியே, எம்இ யிலும் செமஸ்டர்களில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பேன்.. கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக கோவையில் உள்ள லட்சுமி மிஷின் ஒர்க் நிறுவனத்தில் சீனியர் என்ஜினியராக சேர்ந்தேன். அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது விண்வெளி ஆராய்ச்சி மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷனில் டிசைன் என்ஜினியராக சேர்ந்தேன்.

சில காலத்திற்கு பிறகு இஸ்ரோவில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கு முதலில் திட்ட என்ஜினியராகவும், அதன்பிறகு திட்டத்தின் மேனேஜராகவும் நிறைய அறிவியல் செயற்கைகோள் திட்டங்களில் பணியாற்றினேன். செவ்வாய் கிரகத்திக்கான ஆய்வு செயற்கை கோளிலும் பணியாற்றினேன். அதேநேரம் என்னுடைய ஆராயச்சியை விடவில்லை. பெங்களூருவில் பி.எச்டி சேர்ந்தேன். vibration separation of electronics package satellite என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தேன்.

என்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறேன். நிறைய ஆய்வு கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். பிஎச்டி பட்டத்தையும் வென்றேன். இஸ்ரோவின் முதல் நானோ டீமுக்கு தலைமை ஏற்பதற்கான வாய்ப்பு கிடைத்த்து. 3 நானோ செயற்கை கோள்களில் பணியாற்றி உள்ளேன். அசோசியேட் பிராஜெக்ட் இயக்குனராக சந்திரயான்2 வில் பணியாற்றினேன். பின்னர் இஸ்ரோவில் என்னை சந்திரயான் 3 இல் திட்ட இயக்குனராக நியமித்தனர்.

இது இஸ்ரோவின் மிகப்பெரிய திட்டம். பெரிய டீமுக்கு தலைமை தாங்கிக்கொண்டு இருக்கிறேன். நான் மிகவும் எளிமையானவன். . என்னால் இந்த அளவிற்கு வர முடியும் என்றால், எல்லாராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. என்னை பொறுத்தவரை சுயக்கட்டுப்பாடு, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத 100 சதவீதம் ஈடுபாடு, கடின உழைப்பு, நம்முடைய தனித்தன்மை, இது நிச்சயம் வெற்றியை கொடுக்கும். கடின உழைப்புக்கு பலன் உண்டு”
இவ்வாறு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் வீரமுத்துவேல்.

ஒருவர் சாதாரண மனிதராக இருந்தாலும், ஆத்மார்த்தமாக ஒரு வேலையை செய்தால் அதில் வெற்றி பெற்று விடலாம் என்பதற்கு வீரமுத்துவேலின் வாழ்க்கையே சிறந்த உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...