No menu items!

பாஜக செல்வாக்கு குறைகிறதா? – கருத்துக் கணிப்பு முடிவுகள்

பாஜக செல்வாக்கு குறைகிறதா? – கருத்துக் கணிப்பு முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், இத்தேர்தலில் வெற்றிபெறப் போவது யார் என்ற விவாதங்கள் இப்போதே சூடு பிடித்துவிட்டன. இதுதொடர்பான கருத்துக் கணிப்புகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா டுடே, இப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கனிப்பை வெளியிட்டுள்ளது. நாடெங்கிலும் உள்ள 25,951 பேரிடம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதிவரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சி

இந்த கருத்துக் கணிப்பின்படி 2024-ம் ஆண்டில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரியவந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 193 இடங்களிலும் வெற்றிபெறும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இரு கூட்டணிகளிலும் சேராத பிற கட்சிகள் 44 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 74 இடங்களும் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. வாக்கு சதவீதத்தின்படி பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

குறையும் பாஜகவின் செல்வாக்கு

இதற்கு முன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 357 இடங்களில் வெற்றிபெறும் என்றும், இந்தியா கூட்டணி 153 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கூறப்பட்டது. அதன்படி பார்த்தால் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜகவின் செல்வாக்கு முன்பைவிட குறைந்துள்ளது.

மோடிக்கு தொடரும் ஆதரவு

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 52 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருக்கு அடுத்ததாக ராகுல் காந்திக்கு 16 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு எதற்காக வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, மோடிக்காக பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புகிறேன் என்று 44 சதவீதம் பேரும், வளர்ச்சிக்காக பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புகிறேன் என்று 22 சதவீதம் பேரும், இந்துத்துவா கொள்கைகளுக்காக பாஜகவுக்கு வாக்களிக்கிறேன் என்று 14 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு பிறகு அமித் ஷா!

மோடிக்கு அடுத்து பிரதமராக தகுதியுள்ள பாஜக தலைவர் யார் என்ற கேள்விக்கு அமித் ஷாவின் பெயரை பலரும் தெரிவித்துள்ளனர். அமித் ஷாவுக்கு 29 சதவீதம் பேரும், யோகி ஆதியநாத்துக்கு 26 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் நிதின் கட்கரி 3-வது இடத்தில் இருக்கிறார். அவருக்கு 15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முக்கிய பிரச்சினை

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு இணையாக வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் 3-வது இடத்தில் வறுமை இருக்கிறது. நாட்டு மக்களின் வறுமை, தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று 8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை நல்லது?

இந்தியா கூட்டணிக்கு யார் தலைமையேற்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி என்று 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜியின் பெயரை 15 சதவீதம் பேரும், அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயரை 15 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...