No menu items!

லியோ – விஜய்யுடன் சூர்யா, ஃபஹத் பாசில்!

லியோ – விஜய்யுடன் சூர்யா, ஃபஹத் பாசில்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ வசூலில் புதிய சாதனை என்று தமிழ் சினிமா கொண்டாடி கொண்டிருக்கிறது. அதேநேரம் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’, ஜெயிலரின் சாதனையை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஒரு கணிப்பு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

லியோ தயாரிப்பாளர் லலித், இடைவேளை ப்ளாக்கில் 8 நிமிட மரண மாஸ். எங்களுக்கே கூஸ்பம்ப்ஸ் வந்துவிட்டது என்று கூற, மறுபக்கம் மன்சூர் அலிகானும் தன் பங்கிற்கு லியோ புராணம் பாடிக் கொண்டிருக்கிறார். இதனால் இணையத்தில் லியோ பற்றி எதிர்பார்பு அதிகரித்து இருக்கிறது.

லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என எல்சியூ-வை உருவாக்கியதைப் போலவே, இப்போது லியோவில் லோகேஷ் கனகராஜ் தனது ‘கைதி’ மற்றும் ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை சாதுர்யமாக இணைத்திருக்கிறாராம்.

’லியோ’ ஸ்பை த்ரில்லர் வகையறா படமாக இருக்கும். ’விக்ரம்’ படத்தின் க்ளைமாக்ஸில் வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம், லியோவில் விஜயுடன் போனில் பேசுவது போன்ற ஒரு காட்சி திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், விக்ரமில் சீக்ரெட் ஏஜெண்ட்டாக நடித்த ஃபஹத் பாசில், லியோவில் தலையைக் காட்டிவிட்டுப் போவது போலவும் திரைக்கதை இருக்கிறதாம். இதன் மூலம் விக்ரம் பட கதாபாத்திரங்கள் லியோவில் இருப்பதால், அடுத்தடுத்து எல்சியூ-வை தொடரலாம் என லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இவர்களைத் தவிர த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஆண்டனி பாபு என பெரும் நட்சத்திரப்பட்டாளமே லியோ படத்தில் இருக்கிறது.

ஜெயிலரில் சிவராஜ்குமாருக்கு கிடைத்த வரவேற்பைப் போலவே இத்தனை நட்சத்திரங்களை நடிக்க வைத்திருப்பதால், லியோ வியாபாரம் சூடுப்பிடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


ரஜினி 170 – அப்டேட்!!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் உற்சாத்தில் இருக்கிறது. காரணம் ஜெயிலர் படத்தின் வெற்றி. ஜெயிலர் வெற்றியை லைகா ஏன் கொண்டாடுகிறது என்றால், ரஜினி170 பட த்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்தான் தயாரிக்க இருக்கிறது.

’ரஜினி 170’ படத்தை ’ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கவிருக்கிறார்.
இப்படம் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வசதியாக இருக்கும் வகையில்தான் ரஜினி, தனது இமயமலைப் பயணத்தை முன்கூட்டியே பக்காவாக திட்டமிட்டு போய் வந்திருக்கிறாராம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை ‘ரஜினி 170’-ல் நடிக்க வைக்கும் முயற்சிகள் முழூவீச்சில் இருக்கிறது. தனது உடல்நிலையைப் பொறுத்து நடிக்க முடியுமா அல்லது முடியாதா என்று சொல்கிறேன் என்று அமிதாப் பச்சன் கூறியதாக படக்குழு வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரஜினி இதில் அதிரடி காட்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.அதேபோல் திபீகா படுகோனையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது.


ரகுல் ப்ரீத்சிங் கார் விலை இத்தனை கோடியா??

தமிழில் கார்த்தியுடன் ’தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவுடன் ‘என் ஜி கே’ என நடித்தும் பெரிய வாய்ப்புகளை வளைத்துப் போட முடியாமல், பாலிவுட் பக்கம் ‘டேக் டைவர்ஷன்’-ஐ எடுத்தவர் ரகுல் ப்ரீத் சிங்.

திறமை இருந்தும், அழகு இருந்தும் ரகுலால் இங்கே தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் ‘அயலான்’, கமலுடன் நடித்திருக்கும் ‘இந்தியன் -2’ ஆகிய படங்களினால், ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் ஒர் ரவுண்ட் அடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்றும் தெரியவில்லை.

ஆனால் அதுபற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஹிந்தி, தெலுங்குப் படங்களில் மும்முரம் காட்டி வருகிறார். இதனால் அவரது ஹேண்ட்பேக்கில் சம்பளம் நிரம்பிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த குஷியில் அவர் செய்த காரியம், அவருக்கு அவரே ஒரு விலையுயர்ந்த பரிசை அளித்திருக்கிறார். அந்த பரிசின் விலை சுமார் 3.5 கோடி ரூபாய்.

தாராளமான இடவசதியுடன் கூடிய சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் [Mercedes-Benz Maybach GLS]-ஐ வாங்கி தனக்கு பரிசாக்கி கொண்டிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜூக்கும், கோவை பெண் ஓட்டுநருக்கும் கார் வாங்கி கொடுத்த கமல், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் கார் வாங்கி கொடுத்துவிட்டாரா என யாராவது கிசுகிசுவைக் கிளப்பிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...