No menu items!

விஜய் தேவரகொண்டாவும் 8 நடிகைகளும்

விஜய் தேவரகொண்டாவும் 8 நடிகைகளும்

இன்றைய நிலவரப்படி, கவர்ச்சிகரமான நடிகர் என்றால் அது விஜய் தேவரகொண்டாதான் என்கிறார்கள் நடிகைகள்.

தெலுங்கு சினிமாவில் சுற்றி சுற்றி வந்தாலும், இவரை விஜய் தேவரகொண்டாவை வட்டமடிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவர் மேல் ஒரு ‘இது’ என்று சொல்லும் டாப் 8 நடிகைகளின் பட்டியல் இதோ.

முதலாவதாக ஸ்ரீதேவியின் மகளும், ஹிந்தியில் தனது அம்மாவுக்கு இருந்த மவுசை தானும் எப்படியாவது அடைந்துவிட வேண்டுமென கவர்ச்சி உலாவில் வலம் வரும் இளம் தென்றலுமான ஜான்வி கபூர். இவருக்கு விஜய் தேவரகொண்டா மீது செம க்ரஷ் இருக்குதாம். இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித க்ரஷ் அல்ல. அதையும் தாண்டி பிரம்மாண்டமானது என்கிறார்.

அடுத்து ஹிந்தி நடிகரும், கரீனா கபூரை இப்போது கைப்பிடித்தவருமான சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். தனுஷூடன் ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்தாரே அதே ஸ்லிம் சாரா அலிகான்தான். பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹரின் ‘காஃபி வித் கரன் ஜோகன்’ நிகழ்ச்சியில் எனக்கு விஜய் தேவரகொண்டாவோடு டேட்டிங் போக ஆசை என்று வெளிப்படையாக விஜய் தேவரகொண்டாவுக்கு தூது விட்டிருக்கிறார்.

மூன்றாவது கியாரா அத்வானி. பாலிவுட்டில் செக்ஸி சைரனாக கொண்டாடப்படும் இவருக்கு விஜய் தேவரகொண்டா ரொம்ப செக்ஸியாக தெரிகிறாராம்.

நான்காவதாக வரிசையில் நிற்பவர் ஆலியா பட். திருமணம் ஆனதாலோ என்னவோ இவர் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். அதாவது தற்போதுள்ள நடிகர்களில் தன்னுடைய ஃபேவரிட் விஜய் தேவரகொண்டா என்று புன்னகையோடு ஃபுல் ஸ்டாப் வைத்திருக்கிறார்.

ஐந்தாவதாக தமன்னா. ’எனக்கு யாருடனாவது ப்ளைண்ட் டேட் போக வேண்டுமென்று தோன்றினால் முதல் சாய்ஸ் விஜய் தேவரகொண்டாதான். என்ன அழகு இந்த மனுஷன்’ என்று வாய்விட்டு சொல்லியிருக்கிறார்.

’மாஸ்டர்’ படத்தின் மூலம் தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நினைத்தது நடக்காமல் போனதாலோ என்னவோ மாளவிகா மோகனனுக்கு நம்மூர் விஜயை விட, அக்கட தேச விஜய் தேவரகொண்டா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. வி.டி. ரொம்பவே ஹாட் என்று சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்.

ஏழாவதாக விஜய் தேவரகொண்டாவுக்காக கொடிப் பிடித்திருப்பவர் கஸ்தூரி. எதையும் வெளிப்படையாக பேசும் கஸ்தூரி ஸ்டேட்மெண்ட் என்னவென்றால், ‘விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தால் கூட கண்டிப்பாக நான் நடிக்கமாட்டேன். உண்மையச் சொல்ல வேண்டுமென்றால், அவர் மேல் எனக்கு செம க்ரஷ். அப்புறம் எப்படி அம்மாவாக நடிப்பது’ என்று கண் சிமிட்டுகிறார்.

கடைசியாக சமந்தா. ’வி.டி-யைப் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது’ என்கிறார்.

பஹத் ஃபாசிலின் சம்பளம் எவ்வளவு?

வித்தியாசமான கதை. இயல்பான நடிப்பு. கதாபாத்திரங்களுக்கேற்ற அசத்தலான உடல் மொழி. இந்த மூன்று அம்சங்களுக்காகவே பஹத் ஃபாசிலை மலையாளம் திரையுலகம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு சினிமாவும் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

வில்லன் ஹீரோ குணசித்திரப் பாத்திரம் என எதுவாக இருந்தாலும், தனக்கு கதைப் பிடித்துவிட்டால் அப்புறம் பஹத்தின் ஃபெர்பார்மன்ஸ் முன்பு நிற்பவர்களுக்கு பெரும் சவால்தான்.

இவ்வளவு இருந்தும் தொடர்ந்து ஹிட் கொடுத்தாலும் பஹத்தை எல்லோரும் அணுகுவதற்கு முக்கிய காரணம் சம்பளம். ஐந்து கோடி மட்டுமே கேட்கிறாராம். தமிழில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

சராசரி ஹீரோவாக நடித்தவர் திடீரென வில்லனாக ஒரு படத்தில் பிரபலமானதும் மூன்று கோடியிலிருந்து ஹை ஜம்ப் அடிப்பது போல பதினைந்து கோடிக்கு தாவியது தமிழ் தயாரிப்பாளர்களை கொஞ்சம் சங்கடப்படுத்திதான் இருக்கிறது.

இதனால் பஹத் ஃபாசில் பக்கம் கொஞ்சம் காற்று வேகமாகதான் அடிக்கிறதாம். ஆனால் கதை பிடித்தால் மட்டுமே அட்வான்ஸ் வாங்குகிறார் பஹத்.

கொரோனா குமார் படத்தில் சிம்பு விலகல்?

சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதனால் தீவிரமாக கதைகள் கேட்டு வருகிறார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க தயங்குவதாக பேசிக்கொள்கிறார்கள்.

‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது அந்தப்படத்தில் இருந்து அவர் விலகுவதாகவும் கிசுகிசு அடிப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் சம்பளம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அப்படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்தாலும், பேசி ஒப்புக்கொண்ட சம்பளத்தைவிட அதிகம் கேட்கிறாராம். ஆனால் தற்போது சிம்பு நடித்தப் படங்கள் எதுவும் வெளியாக சூழ்நிலையில் எப்படி சம்பளத்தை அதிகம் கொடுப்பது என தயாரிப்பாளர் தரப்பு யோசிக்கிறதாம்.

ஆனால் சம்பளம் அதிகம் கொடுத்தால் நடிக்கிறேன். இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சிம்பு திட்டவட்டமாக சொல்லியதாக தகவல்கள் வருகின்றன.
படமே இல்லாத போது இந்த கெடுபிடிகள் எல்லாம் தேவைதானா என்கிறார்கள் சிம்புவுக்கு நெருங்கியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...