No menu items!

த்ரிஷாவின் வந்தியத் தேவன்

த்ரிஷாவின் வந்தியத் தேவன்

’பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘குந்தவையாக’ வந்து நின்ற த்ரிஷாவைப் பார்த்து கொஞ்சம் கிறங்கிப் போய்தான் கிடக்கிறார்கள் இளசுகள்.

39 வயதானாலும் ’சிக்’கென்று ஸ்லிம்மாக, இன்னும் இளமையாக இருப்பதால் அவரை சந்திக்கும்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி, ‘இந்த குந்தவையின் வந்தியத்தேவன் யார்? எப்போது திருமணம்?’ என்பதுதான். இதனால் கொஞ்சம் டென்ஷனில்தான் இருக்கிறார் த்ரிஷா.

‘’திருமணம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. பிடிக்காத ஆளை திருமணம் பண்ணியே ஆகவேண்டுமென்பதற்காக கட்டிய பின் விவாகரத்து வாங்கும், எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

எனக்கு தெரிந்த பல நண்பர்கள் திருமணமாகி சந்தோஷமாக இருக்கிறார்கள். சிலரது வாழ்க்கை சிக்கலில் இருக்கிறது. விவாகரத்திலும் முடிந்திருக்கிறது. .

எனக்கு விவாகரத்தில் உடன்பாடு இல்லை. எனக்கான சரியான ஆண் ஒருவரை சந்தித்தால் நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். சந்தோஷமில்லாத, சங்கடப்படுத்துகிற கல்யாணத்தில் அவதிப்பட நான் விரும்பவில்லை’’ என்று பட்டாசாக பதிலளித்துள்ளார் த்ரிஷா.

மாலத் தீவில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா

தென்னிந்திய சினிமா உலகில் கடந்த ஜூன் மாதத்துக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி நயன் – விக்கி.

ஜூன் 9-ம் தேதி இவர்களுக்கு திருமணமானதுமே அந்த ’பரபரப்பு காதல் ஜோடி’க்கான மவுசை விக்கியும் நயனும் இழந்துவிட, அந்த இடம் காலியாக இருந்தது.

சுவாரஸ்யமான கிசுகிசுக்களுக்கு இனி வழி இல்லையா என்று ஊடகத்தினர் அலுவலகத்தின் மோட்டுவளையை பார்த்து கொண்டிருந்த வேளையில் வசமாக சிக்கியிருக்கிறது ஒரு புது ஜோடி.

ஏற்கனவே காதலா என கிசுகிசுக்கப்பட்டு, அதை மறுத்து நண்பர்கள் என சொல்லிவிட்டு இப்போது ஒன்றாக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ஜோடி.

இருவரும் ஒரே மாதிரியான சன் க்ளாஸ்கள், ட்ராலி, ஒரே நேரத்தில் கோலாகலமான சுற்றுப்பயணம் என கிளம்ப இந்த விவகாரம் இப்போது மீடியாவில் பற்றியெரிகிறது.

திருமணத்துக்கு முன்பாகவே இப்படி ஜோடியாக கிளம்பும் கலாச்சாரம் பாலிவுட் பாணி. அந்த ட்ரெண்ட் இன்னும் தென்னிந்திய சினிமாவுக்கு அதிகம் பழக்கப்படாத சூழ்நிலையில் இப்போது அந்த ட்ரெண்டை கையிலெடுத்து இருக்கிறார்கள் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா என்கிறது டோலிவுட் வட்டாரம்.

கோடையில் பொன்னியின் செல்வன் – 2

’பொன்னியின் செல்வன்’ தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு உற்சாகத்தை தரவில்லை. ஆனாலும் இதைக்கண்டு மணி ரத்னம் சோர்ந்து போனதாக தெரியவில்லை.

மளமளவென அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

காரணம் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ‘பொன்னியின் செல்வன்’ இன்னும் தூள் கிளப்பி கொண்டிருக்கிறது.

சமீபத்திய தகவலின்படி, ரஜினிகாந்த் நடித்த எந்திரனின் இரண்டாம் பாகமான ’2.0’ படத்தின் வசூலையெல்லாம் ஓரங்கட்டியபடி ’பொன்னியின் செல்வன்’ தொடர்ந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரையில் 5.55 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறது.

இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் மும்முரமாகி இருக்கும் மணிரத்னம், வருகிற ஆண்டு கோடைக்கால விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் என்கிறது மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரம்.

முதல் பாகம் எடுக்கும் பொழுதே இரண்டாம் பாகத்திற்கான முக்கிய காட்சிகளை எடுத்துவிட்டதால், இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டதாம்.

கோடை விடுமுறையைக் குறி வைத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது என்றாலும் ரிலீஸ் தேதியை இந்த வருட இறுதியில் மணிரத்னம் தெரிவிப்பார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...