No menu items!

தேவர் குருபூஜையில் மோடி பங்கேற்பு: ஏற்பாடுகள் தீவிரம்

தேவர் குருபூஜையில் மோடி பங்கேற்பு: ஏற்பாடுகள் தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30ஆம் தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்பதால் அரசு சார்பில் இப்போதே விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டுக்கு வருகிற 30-ந் தேதி வரும் பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாரதிய ஜனதா தலைவர்களும் தீவிர ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

. ராசா மீது சி.பி.. குற்றப் பத்திரிகை தாக்கல்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு

ஆ. ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. 1999ஆம் ஆண்டு பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது. இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி தகவல்

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, “இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் பெரும்பாலானவர்கள் கணினி அறிவியல், ஐ.டி., எலக்ட்ரானிக் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வில் 10,351 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 2ஆம் கட்ட கலந்தாய்வில் 23,458 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கான 3ஆவது கட்ட கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. பொறியியல் படிப்பில் இன்னும் 1.10 லட்சம் பேருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. அக்டோபர் 13ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும்” என்று கூறினார்.

இந்தி பேசாத மக்கள் மீதான போர்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது.

“ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். எனவே, ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சிறுவனை கடத்தி சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவி: போக்சோ சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தவர் சூர்யா (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற சூர்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் சூர்யா இருப்பதை கண்டுபிடித்தனர். அவருடன் இருந்த இளம்பெண்ணையும் பிடித்து விசாரித்தபோது, அப்பெண்ணின் பெயர் சாந்தி (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், சூர்யாவுடன் படித்ததும், இருவரும் திருமணம் செய்துகொண்டு, வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவதும், சாந்தி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. சூர்யா வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவர் சிறுவன். எனவே, சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்ததாக சாந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...