No menu items!

ப்ரியா மணி சொல்லும் ரகசியம்

ப்ரியா மணி சொல்லும் ரகசியம்

ப்ரியா மணிக்கு பட வாய்ப்புகளை குறைந்து மார்கெட் டல்லடிக்க ஆரம்பித்ததுமே சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகிய சில வருடங்களில் நடிகைக்களுக்கே இருக்கும் ஃபோஸ்ட்மேரேஜ்போபியா பிரச்சினையால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம், முக்கியமான துணை கதாபாத்திரங்கள் என இப்போது கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்.

திரும்பவும் நடிக்க வந்துவிட்டீர்களே உங்களுக்கும் கணவருக்கு இடையே பிரச்சினையா என்று வழக்கம் போல் வம்பு இழுக்க நினைத்தவர்களுக்கு தீனிப் போடாமல் அமைதியாகிவிட்டார்.

ஆனால் மற்ற விஷயங்களையெல்லாம் பேசுவதில் ப்ரியா மணி தயக்கம் காட்டுவதில்லை. ஹிந்தி சினிமாவிலும், வெப் சிரீஸிலும் நடித்து வரும் ப்ரியா மணிக்கு ஒரு சில பாலிவுட் ஃபார்மூலாக்கள் செட் ஆகவில்லையாம்.

அதில் ஒன்று, எங்குச் சென்றாலும் துரத்தி வந்து போட்டோ எடுத்து பரபரப்பாக்கும் பாப்பராஸிகள். சமூக ஊடகங்களில், பாலிவுட் நடிகைகள், நடிகர்கள் ஜிம்முக்கு போவது, ஏர்போர்ட்டுக்கு வருவது, ரெஸ்டாரண்டில் ஜூஸ் குடிப்பது, பார்க்கிங்கில் இறங்குவது இப்படி அப்படி என வீடியோக்களும், புகைப்படங்களும் கொட்டிக் கிடக்கும்.

இது எப்படி சாத்தியம் என்று யோசிப்பவர்களுக்கான, ப்ரியா மணி உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
பாப்பராஸிகளுக்கென ஒரு ஏஜென்ஸிகள் தனியாக செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருக்கும். இப்பொழுது ஒரு நட்சத்திரம் தன்னைப் பற்றி வீடியோக்களும், புகைப்படங்களும் பத்திரிகைகளில், இணையதளங்களில் வரவேண்டுமென விரும்பினால், இந்த பாப்பராஸி ஏஜென்ஸியை தொடர்பு கொள்வார்கள்.

எத்தனை போட்டோகிராஃபர்களை ஜிம்முக்கோ அல்லது அவர்கள் விரும்பி இடத்திற்கோ வரவைக்க முடியுமென கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

சொன்ன நேரத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள். அவர்களை யதேச்சையாக பார்த்து துரத்துவது போல் போட்டோக்ராஃபர்கள் போட்டோக்கள் எடுப்பார்கள். இப்படி போட்டோ எடுக்கும் பாப்பராஸிகளுக்கு அந்தந்த நட்சத்திரங்கள் சார்பாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

‘பெரும்பாலான பாலிவுட் நட்சத்திரங்கள் பாப்பராஸிகளுக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.அதனால் அவங்க போட்டோ எடுப்பாங்கன்னு எனக்கு முதல்ல தெரியாது.

எனக்கு ஒரு நண்பர் இருக்காரு. அவர் காஸ்டிங் டைரக்டர். அவர்தான் என்கிட்ட உனக்கு பாப்பராஸி போட்டோ ஷூட் வேணுமான்னு கேட்டார். ஜவான் படத்துக்கு அப்புறம் நீயும் பாப்புலர். அதான் கேட்டேன்னு சொன்னார். ஆனால் எ’னக்கு அதெல்லாம் செட்டாகாதுன்னு அவர்கிட்ட சொல்லிவிட்டேன்’ என்கிறார் ப்ரியா மணி.

’பாப்பராஸி ஏஜென்ஸிகள் போடுற ரேட்டை பார்த்து ஆச்சர்யப்படிருக்கேன். ஒவ்வொருத்தருடைய தேவையைப் பொறுத்து ரேட் மாறும். எனக்கு சுய தம்பட்டம் அடிக்கிறதுல விருப்பமில்ல. அதே மாதிரி தேவையில்லாம கவனத்தை ஈர்க்கிறதுல எனக்கு ஆசையும் இல்ல’ என்கிறார் ப்ரியா மணி.

’இந்த பாலிவுட் பாப்பராஸி ட்ரெண்ட் இப்போ தென்னிந்திய சினிமாவிலயும் வந்தாச்சு’ என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறார்.


விஜய் வாரிசுக்கு குழப்பம்!

அதர்வா
கவின்
துருவ் விக்ரம்
விஜய் சேதுபதி
இப்படி ஒவ்வொருத்தருடைய பெயராக அடிப்பட்டது. விஜய் சேதுபதிக்கு கதையைக் கூட சொல்லிவிட்டார். அவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் என்று ஒரு தகவல் கசிந்தது.

இதெல்லாம் ஒரு வருங்கால இயக்குநருக்காக நடக்கும் மெகா ப்ராஜெக்ட் நிலவரம். விஜயின் மகன் ஜேஸன் சஞ்சய் என்பதால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

ஜேஸன் சஞ்சய்க்கு அப்பாவைப் போல் ஹீரோவாக வேண்டும் என்ற கவர்ச்சிகரமான ஆசையெல்லாம் இல்லை. கேமராவுக்கு பின்னால் நின்று ஹீரோக்களை இயக்கும் ஒரு இயக்குநராகவேண்டுமென்பதுதான் ஆசை.

இதனால்தான் கல்லூரிப் படிப்பு முடிந்ததும். திரைப்படம் தொடர்பான படிப்பதற்காக கனடாவுக்குப் பறந்து போனார். அங்கே டைரக்‌ஷன் சம்பந்தமான படிப்பைத் தொடர்ந்தார். பாடத்திட்டங்களின் தேவைக்காக குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

படிப்பை முடித்தவருக்கு, கடந்த 2023 ஆகஸ்ட்டில் லைகா ரெட் கார்பெட் வரவேற்பை கொடுத்திருக்கிறது. விஜய்க்கு கூட தெரியாமல் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற கிசுகிசுவும் இருந்தது. அதேபோல் தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநருக்கும் இடையே போடப்படுகிற ஒப்பந்தமுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். இதுவரையில் ஒப்பந்தத்துடன் புகைப்படங்கள் வெளியானது இல்லை.

இந்த பரபரப்புக்குப் பிறகு, கிணற்றில் போடப்பட்ட கல்லைப் போல் இருந்தது சஞ்சயின் முதல் படம்.

லைகா தரப்பிலிருந்து ஹீரோவை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதாம்.

விஜயின் மகன் என்ற பெரும் சுமை இருப்பதால், முதல் படத்தில் தவறு செய்துவிடக்கூடாது என்று சஞ்சய் ரொம்பவே கவனமாக இருக்கிறாராம். இதனால்தான் யாரை ஹீரோவாக்குவது என்ற குழப்பம் அதிகமாகிவிட்டதாம்.

இப்போது மேலே சொன்ன நான்கு பேரும் இல்லை. துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள். துல்கருக்கு கதை என்பதால், முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறதாம்.

சஞ்சய்க்கும், துல்கருக்கும் ஒகே என்றால் சம்பள விஷயத்தில் லைகா கறாராக இருக்கவிரும்பவில்லையாம்.

வெகு சீக்கிரமே இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...