No menu items!

ஏமாற்றத்தில் ப்ரியா பவானி சங்கர்!!

ஏமாற்றத்தில் ப்ரியா பவானி சங்கர்!!

ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் ஹீரோயினாக நடித்தப் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இதனால் ஏக வருத்தத்தில் இருந்த ப்ரியா பவானி சங்கரை தேற்றும்விதமாக, முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரம் அல்லது இரண்டாவது கதாநாயகியாக நடியுங்கள் என்றும் அவரது மேலாளர் மற்றும் ஆலோசகர் வட்டாரம் பல டிப்ஸ்களை எடுத்துவிட்டதாம்.

அதை நம்பி சுறுசுறுப்பாக இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதற்கு களத்தில் இறங்கினார் ப்ரியா பவானி சங்கர். சொல்லிக் கொள்கிற சம்பளம் இரண்டு வாரம் ஷூட்டிங் என அந்த ஆலோசகர் போட்டு கொடுத்த ரூட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே செட்டானது.

இப்போது தனுஷூடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தைதான் பெரிதாக நம்பியிருந்தாராம். தனுஷ் கிராமத்திற்கு வரும் போது அடிக்கும் சேட்டைகள்தான் செம ஹைலைட்டாக இருக்குமென்று சொல்லப்பட்டதாம்.

ஆனால் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டை போல காட்டியிருப்பதாலும், பல காட்சிகளை எடிட் செய்துவிட்டதாலும் ஏக ஏமாற்றத்தில் இருக்கிறாராம்.

இதனால் இன்ஸ்டாக்ராமில் ’திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் என்று ஒரு போட்டோவை போட்டதோடு சரி, அங்கிருந்து கடையை மூடிவிட்டு கிளம்பிவிட்டார். ரிலீஸூக்கு பிந்தைய ப்ரமோஷன் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கறாராக சொல்லிவிட்டாராம்.

இனி நடித்தால் சிங்கிள் ஹீரோயின். இல்லையென்றால் ஒடிடி பக்கம் செட்டிலாகி விடுவேன் என்று ப்ரியா பவானி சங்கர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

சமந்தா வீட்டில் கேட்கும் ஊ ஆ சத்தம்!!

திருமண முறிவுக்குப் பின்னர் அயர்ன் மேன் வேகத்தில் சென்னை, ஹைதராபாத், மும்பை என மாறி மாறி பறந்து கொண்டிருக்கிறார் சமந்தா.

கதாநாயகியா இல்லை நல்ல கதாபாத்திரமா அட்வான்ஸை வாங்கு. மீட்டரைப் போடு என்ற கொள்கைக்கு சமந்தா மாறிவிட்டதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். இப்போது சமந்தா கைவசம் படங்களும், ஒடிடி சீரிஸ்களும் கமிட்டாகி இருக்கின்றனவாம்.

அதில் ஒன்று, சர்வதேச அளவில் பிரபலமான ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ். இந்த சீரிஸை இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்க திட்டமிட்டு இந்தியாவுக்கு ஏற்ற வகையில் இதில் மாற்றங்களைச் செய்திருக்கிறார்களாம்.

இதில் கமிட்டாகி இருக்கும் சமந்தாவுக்கு, புதிய நெருக்கடி வந்திருக்கிறது. இக்கதையின் படி சமந்தாவுக்கு தற்காப்பு கலை கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமாம். ஆக்‌ஷன் காட்சிகளில் சமந்தா தூள் கிளப்பும் ஒரு சில காட்சிகளும் இருக்கிறதாம்.

இதனால் தனது வீட்டிலேயே தற்காப்பு கலையை பயில ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. இதனால் அவரது வீட்டை கடந்துப் போனால் ‘ஊ ஆ’ என்ற சத்தத்தைக் கேட்க் முடிகிறதாம். மேலும் உடலைக் கட்டுக்கோப்பாகவும்

வைத்திருக்கவேண்டுமென இயக்குநர் தரப்பில் நிபந்தனை போடப்பட்டுள்ளதாம்.

இந்தியன் – 2 ஷூட்டிங் திடீர் மாற்றம்!

கமலும், ஷங்கரும் இணைந்த ‘இந்தியன் – 2’ படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டது. காரணம், தயாரிப்பு நிறுவனம், கமல், ஷங்கர் என மூன்று தரப்பிற்கும் இடையே இருந்த முக்கோண பஞ்சாயத்து.

கமலின் ‘விக்ரம்’ படத்தின் குபீர் வெற்றிதான் இப்போது இந்தியன் – 2 படத்தின் திடீர் பரபரப்புக்கு காரணமாகி இருக்கிறது. முக்கோண பஞ்சாயத்து கமலுக்கு கிடைத்த மவுசு காரணமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்நிலையில்தான் ‘இந்தியன் – 2’ படத்தின் ஷூட்டிங்கை செப்டெம்பர் 13-ம் தேதி தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த தேதியில்தான் தற்போது திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்ட ஷெட்யூலுக்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே ’இந்தியன் – 2’ ஷூட்டிங்கை தொடங்கலாமா என்று ஷங்கர் யோசித்து வருகிறாராம். அதாவது இந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதியில் ஷூட்டிங்கை தொடங்கிவிடலாம் என்று ஷெட்யூல் போடப்பட்டு வருகிறதாம். சென்டிமெண்டாக படத்தின் வேலைகளை தொடங்கிவிடலாம். குறைந்தபட்சமாக ஒரு வாரம் ஷூட்டிங்கை நடத்தி விட்டால், அதன் பிறகு ஷூட்டிங் வேலைகள் மளமளவென நடக்கும் என்று ஷங்கர் தரப்பு யோசிக்கிறதாம்.

இந்த திடீர் ஷெட்யூலில் கமல், காஜல் அகர்வால் பங்கேற்கும் காட்சிகள் இல்லாமல், இதுவரை ஷூட் செய்த காட்சிகளுக்கான பேட்ச் அப் வேலைகளை முடிக்க முடிவாகி இருக்கிறதாம்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...