No menu items!

ட்விட்டரில் ட்ரோல் ஆகும் கார்த்தி த்ரிஷா

ட்விட்டரில் ட்ரோல் ஆகும் கார்த்தி த்ரிஷா

மணிரத்னம் தன்னுடைய படங்களுக்கு ப்ரமோஷன் செய்யும் ஸ்டைலே கொஞ்சம் வித்தியாசமானது.

தன்னுடைய படம் தொடங்கும் போது சைலண்ட் மோடுக்கோ அல்லது ஏர்ப்ளேன் மோடுக்கோ போய்விடுவார் மணிரத்னம். பத்திரிகையாளர்களோ, டிவி சேனல் ஆட்களோ, எஃப்,எம் ஆர்ஜேக்களோ லேட்டஸ்ட் சோஷியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்களோ யாரும் நெருங்கவே முடியாத அளவுக்கு, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.

படம் முடிந்துவிட்டால், ஒட்டுமொத்த மீடியாவையும் கூப்பிட்டு வைத்து பேட்டி பேட்டியாக கொடுப்பார். நியூயார்க் டைம்ஸ் என இண்டர்நேஷனல் பேப்பர் முதல் தண்டையார்பேட்டை முட்டுசந்து டைம்ஸ் என லோக்கல் பேப்பர் வரைக்கும் அவரது பேட்டிகள் வந்து கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த பொன்னியின் செல்வனில், மணிரத்னத்திற்குப் பதிலாக படத்தில் நடிக்கும் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி என எல்லோரும் சொல்லி வைத்து ப்ரமோஷனை தொடங்கினார்கள். முதல் பாகம் வெளியான போது இவர்கள் ட்விட்டரில் போட்ட ட்வீட்களுக்கு செம வரவேற்பு.

அதை மனதில் வைத்து இரண்டாம் பாகத்தின் ‘அகநக’ பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை தொடர்ந்து மீண்டும் ட்விட்டரில் ப்ரமோஷனை தொடங்கி இருக்கிறார்கள் கார்த்தியும் த்ரிஷாவும்.

ஆனால் இந்த முறை ப்ரமோஷன் கொஞ்சம் பேக்ஃபயர் ஆகி இருப்பதுதான் உண்மை.

அகநக பாடல் வெளியானதும், கார்த்தி,

‘இளையப் பிராட்டி ஹாய்’

என்று ஒரு ட்வீட்டை போட்டார்.

த்ரிஷாவிடம் இருந்து பதில் வராததால்

‘என்ன பதிலே இல்ல’

என்று கார்த்தி கேள்வி கேட்டு ட்வீட் போட்டார்.
அவ்வளவுதான் ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரோலிங்கை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு நெட்டிசன், இளையப் பிராட்டிக்கு தமிழ் எழுத / படிக்க / பேச தெரியாது என்று ட்வீட்டை தட்டிவிட்டார்.

இதற்கு பிறகுதான் ட்விட்டரே கமெண்ட்களால் அதிர.ஆரம்பித்தது

‘அவங்க விஜய்ணா கூட பிஸியாக இருக்காங்கண்ணா’

தோழிஸ் எப்பவும் மெதுவாதான் ரிப்ளே பண்ணுவாங்கண்ணா

யோவ் மாமா அத ஃபோன் செஞ்சே கேக்கலாமேயா இங்க எதுக்கு

இளையபிராட்டி அவருக்குப் பிடித்த உள்ளம் கவர்ந்த கள்வனோடு காஷ்மீரில் இன்பச்சுற்றுலாவில் இருக்கிறார்.தொந்தரவு செய்யாதீர் வந்தியத்தேவரே…

இளைய பிராட்டி தலைய இந்நேரம் லோகி வெட்டி எடுத்துருப்பாரு…நீங்கல்லாம் சோழப்படைகளை அழைத்து கொண்டு காஷ்மீரில் போர் தொடுத்து செல்லுங்கள்…பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகமும் ரெடியாயிடும்…

Cringe bro
Neenga inga okkandhu Hi bye nu msg anupinu irukinga Andha இளையபிராட்டி anga Kashmir la okkandhu Leo oda chocolate kindinu iruka

என்ன ரிப்ளை காணோம் ………… இதெல்லாம் பாண்டிய நாட்டுக் காரன் பாத்தா என்ன நெனப்பான் ………..

இப்படி ஆளாளுக்கு ட்வீட்களை போட பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் இப்போது ட்ரோலிங் சமாச்சாரமாகி விட்டது. நெட்டிசன்கள் இதுதான் சந்தர்ப்பம் என்பது போல் ட்விட்டரை ரணகளம் ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.

இதனால் பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் இனி வேற ரூட்டில் போகுமா இல்லை இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...