No menu items!

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை: பட்ஜெட்டில் அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை: பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் 2023- 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.

ஒகேனக்கல் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.7,149 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் 10,000 குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

கூவம், அடையாறு நதிகள் ரூ.1500 கோடியில் சீரமைக்கப்படும்.

ரூ.1000 கோடி செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்.

சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.320 கோடி நிதி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.19,465 கோடி நிதி ஒதுக்கீடு.

1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ரூ.20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை.

தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டு முதல் 1000 ரூபாய் வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பாலியல் புகார்: கன்னியாகுமரி மதபோதகர் பெனடிக் ஆன்டோ கைது

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனிடையே, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வரும் பெண்களுடன் வீடியோவில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்டோ மீது இளம்பெண் புகார் அளித்தார். புகாரையடுத்து பாதிரியார் ஆன்டோ தலைமறைவானார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோவை போலீசார் இன்று கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்தியா மீது வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு – மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் திரைப்படப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நடிகர் தனுஷுடனான திருமண முறிவுக்குப் பிறகு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன்  தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகைகள் காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...