No menu items!

’வாழ்றான்யா மனுஷன்’ – ஹர்திக் பாண்டியா Life Style

’வாழ்றான்யா மனுஷன்’ – ஹர்திக் பாண்டியா Life Style

’வாழ்றான்யா மனுஷன்’ என்று பல சமயங்களில் பலர் பேசுவதை கேட்டிருக்கிறோம். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் இப்போது ‘வாழ்றான்யா மனுஷன்’ பட்டியலில் வந்துவிட்டார். சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் தனக்கு மகிழ்ச்சி தரும் அத்தனை விஷயங்களுக்காகவும் பயன்படுத்துகிறார்.

இதோ அவர் லைஃப் ஸ்டைல்:

வீடு:

ஹர்த்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் குருணால் பாண்டியாவும் இன்னும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கிறார்கள் வடோதராவில் வசித்துவந்த அவர்கள், கடந்த ஆண்டில் மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்டுக்கு மாறியுள்ளனர் 8 அறைகளைக் கொண்ட இந்த அபார்ட்மெண்டின் விலை 30 கோடி ரூபாய். உடற்பயிற்சி அறை உள்ளிட்ட பல அறைகள் இந்த வீட்டில் உள்ளன.

கைக்கடிகாரம்:

வழக்கமாக துபாய் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாக்லேட், சென்ட் போன்ற பொருட்களை வாங்கி வருவார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் தங்க நகைகளை வாங்குவார்கள். ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற ஹர்த்திக் பாண்டியா 2 கைக்கடிகாரங்களை வாங்கி வந்தார். Patek Philippe Nautilus Platinum 5711 வகையைச் சார்ந்த அந்த 2 கைக்கடிகாரங்களின் விலை ரூ.5 கோடி.

மும்பை விமான நிலையத்தில் இந்த 2 கைக்கடிகாரங்களையும் சுங்கத் துறையினர் கைப்பற்ற இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கைக்கடிகாரங்கள் மட்டுமல்ல இதேபோன்ற மேலும் 6 கைக்கடிகாரங்களை வைத்துள்ளார் ஹர்த்திக் பாண்டியா. அவரது கைக்கடிகாரங்களின் மொத்த மதிப்பு 7 கோடி ரூபாய்.

சட்டை:

ஆள் பாதி ஆடை பாதி என்பதில் உறுதியாய் இருப்பவர் ஹர்த்திக். அதனாலேயே தான் அணியும் சட்டை முதல் காலணிகள் வரை மிகுந்த கவனம் செலுத்துவார். அவர் வைத்துள்ள பைஜாமாவின் விலை 1.6 லட்சம். 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வேறு பல சட்டைகளையும் அவர் வைத்துள்ளார். தனது ஆடையில் மட்டுமின்றி தனது மகன் அகஸ்த்யா பாண்டியா அணியும் ஆடைகளிலும் ஹர்த்திக் பாண்டியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 10 ஆயிரம் ரூபாய் டீஷர்ட்டில் தனது தந்தையுடன் அகஸ்த்யா பாண்டியா கடற்கரைக்கு சென்றது வடநாட்டு பத்திரிகைகளில் செய்தியானது. சட்டையைப் போலவே ஹர்த்திக் பாண்டியா வைத்துள்ள வெள்ளை நிற ஷூவும் மிகவும் காஸ்ட்லி. அதன் விலை 1.5 லட்ச ரூபாய்.

கார்:

நட்சத்திரங்களின் மதிப்பை அவர்கள் வைத்துள்ள கார்கள்தான் பெரும்பாலும் முடிவு செய்கின்றன. மிகப்பெரிய பார்ட்டிகளில் நட்சத்திரங்கள் வந்திறங்கும் கார்களை வைத்து அவர்களுக்கு மரியாதை வழங்கப்படுவது உண்டு. இந்த விஷயத்திலும் ஹர்த்திக் பாண்டியா சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விலைமதிப்புள்ள காரை வைத்திருப்பவர் ஹர்த்திக் பாண்டியாதான். லம்போர்கினி ஹுராகான் இவோ (Lamborghini Huracan Evo) காரைத்தான் இவர் அதிகம் பயன்படுத்துகிறார். இதன் விலை 3.73 கோடி. இதைத்தவிர டயோட்டா எடியோஸ், ஆடி ஏ6, ரேஞ்ச் ரோவர் ரோக் உள்ளிட்ட பலவகை கார்களை அவர் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...