No menu items!

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

தமிழக செஸ் வீரரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இள வயதில் இந்த பட்டத்தை வென்ற வீர்ர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. சர்வதேச அளவில் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருக்கும் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் இதில் பங்கேற்பது வழக்கம். இப்போட்டித் தொடரில் அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனை உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதுவது வழக்கம்.

அதன்படி இம்முறை நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றின் முடிவில் தமிழக வீர்ர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார். நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் 14-வது சுற்று போட்டி நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ், இப்போட்டியை டிரா செய்தார். இதன்மூலம் குகேஷ் பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 9 ஆனது. நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா இடையிலான ஆட்டம் டிரா ஆனதால் அவர்கள் இருவரின் புள்ளிக்கணக்கு 8.5-க ஆனது. இதைத்தொடர்ந்து .5 புள்ளிகள் வித்தியாசத்தில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 17 வயதிலேயே காண்டிடேஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார்.

யார் இந்த குகேஷ்?

மிக இளம் வயதில் கேண்டிடேட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், சென்னையைச் சேர்ந்த செஸ் வீர்ர் ஆவார். குகேஷின் அம்மா பத்மா, ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். அவரது அப்பா ரஜினிகாந்த், காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர். வேலம்மாள் பள்ளியில் படித்த குகேஷ், தனது 7 வயது முதல் பள்ளியிலேயே செஸ் பயின்று வந்துள்ளார். அங்கு அவருக்கு செஸ் பயிற்சி அளித்த பாஸ்கர் என்ற ஆசிரியர் கூறும்போது, “7 வயதில் செஸ் பயிற்சிக்கு வந்த குகேஷ், 6 மாதங்களிலேயே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு மிகச் சிறந்த செஸ் வீர்ர் ஆகிவிட்டார். அப்போதே அவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருப்பது எனக்குத் தெரிந்தது” என்கிறார்.

வேலம்மாள் பள்ளியில் ஆரம்பகட்ட பயிற்சியை முடித்த குகேஷ், பின்னர் விஜயானந்த் என்ற பயிற்சியாளரிடம் அடுத்த கட்ட பயிற்சிக்காக சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்த நாள் முதல் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளார் குகேஷ். 2015-ல் ஆசிய ஸ்கூல் செஸ் சாம்பியன்ஷிப், கேண்டிடேட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை குகேஷ் வென்றார். 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளையோர் செஸ் போட்டியில் குகேஷ் 5 பதக்கங்களை வெல்ல, அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியது.

தன் 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற குகேஷ், பல சர்வதேச போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டினார். இப்போது கேண்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...