No menu items!

தோனி ஓய்வு? ஜடேஜா விலகல்? – CSK Secrets

தோனி ஓய்வு? ஜடேஜா விலகல்? – CSK Secrets

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக இயக்குநரான காசி விஸ்வநாதன் சமீபத்தில் சில செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். தோனியின் ஓய்வு, ஜடேஜாவின் ஊடல் என பல விஷயங்களைப் பற்றி இந்த பேட்டிகளில் அவர் விளக்கியிருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டிகளில் இருந்து சில பகுதிகள்:

தோனியின் காயம்:

இந்த ஐபிஎல் தொடர் முழுக்க கால் முட்டியில் ஏற்பட்ட காயத்துடன் தோனி ஆடினார். மற்ற வீரர்களால் இப்படி காயத்துடன் ஆடியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. இந்த ஐபிஎல் தொடர் முழுக்க காயங்களுடன் தோனி ஆடினாலும், ஒரு நாள்கூட அவர் அதுபற்றி புகார் சொல்லவில்லை. நாங்களாகத்தான் அவர் காயம்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டோம்.

ஐபிஎல் இறுதிப் போட்டிவரை தனது காயத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத தோனி, இறுதிப் போட்டி முடிந்த பிறகுதான் காயத்தைப் பற்றி வாயைத் திறந்தார். இறுதிப் போட்டிக்கு பிறகு எங்களிடம் பேசிய அவர், “நான் இங்கிருந்து நேராக மும்பைக்கு போகப் போகிறேன். அங்கு என் கால் முட்டியில் ஒரு அறுவை சிகிச்சை செய்து முடித்தபின்பு ராஞ்சிக்கு போகிறேன். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயிற்சிகளைத் தொடர்வேன்.” என்றார். இதைக் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அறுவைச் சிகிச்ச்சை செய்யும் அளவுக்கு கால் முட்டியில் காயத்தை வைத்துக்கொண்டு, அதைப்பற்றி ஒரு புகார்கூட சொல்லாமல் ஐபிஎல் தொடர் முழுக்க ஆடியிருக்கிறாரே என்று மலைப்பாகவும் இருந்த்து.

தோனியின் இப்போதைய நிலை:

சில நாட்களுக்கு முன்பு, ஜூன் 4-ம் தேதி ருதுராஜ் கெய்க்வாட்டின் திருமணத்துக்காக நான் மும்பை சென்றிருந்தேன். அப்போது மருத்துவமனைக்கு சென்று தோனியைச் சந்தித்தேன். அவர் தற்போது நன்றாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். 3 வாரம் ஓய்வு எடுத்த பிறகு பயிற்சியைத் தொடரப் போவதாக கூறினார். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆடப் போவதில்லை என்றும் தோனி கூறியிருக்கிறார். ஓய்வைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

எப்போது எதைச் செய்யவேண்டும் என்று தோனிக்கு நன்றாகத் தெரியும் அவர் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். ஐபிஎல் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பதாக இருந்தால், முதலில் என்.சீனிவாசனிடம்தான் அவர் சொல்வார். 2008-ம் ஆண்டுமுதல் இதுவரை சிஎஸ்கேவில் முக்கிய முடிவுகளைப் பற்றி இப்படித்தான் தோனி எடுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் அவரிடம்தான் முதலில் கூறியிருக்கிறார். அவர் அறிவித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை சிஎஸ்கே எடுக்கும்.

ஜடேஜா – தோனி மோதல்:

ஜடேஜாவுக்கும் தோனிக்கும் இடையே என்றும் மோதல் வந்ததில்லை. இந்த தொடரில் பொதுவாக கடைசி 2 ஓவர்களில்தான் ஜடேஜா பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த்து. அவர் அவுட் ஆன பிறகுதான் தோனி ஆட வருவார் என்பதால் சில போட்டிகளில் அவர் அவுட் ஆக ரசிகர்கள் விரும்பினார்கள். ஜடேஜா அவுட் ஆனதை கொண்டாடினார்கள். தோனி ரசிகர்கள் இப்படி செய்த்து சில சமயம் ஜடேஜாவை வருந்த வைத்திருக்கலாம். எந்த வீர்ராக இருந்தாலும் இது நடக்கும்.

ஆனால் அதை வைத்துக்கொண்டு, அவருக்கும் தோனிக்கும் சணடை என்றும், சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகுவார் என்றும் சிலர் கதை கட்டினார்கள். ஒருமுறை நானும் ஜடேஜாவும் பேசும் வீடியோவைப் போட்டு, நான் ஜடேஜாவை சமாதானப்படுத்த முயன்றதாக கூறினார்கள். ஆனால் நாங்கள் ஆதைப்பற்றி ஏதும் பேசவில்லை. அந்த போட்டியைப் பற்றித்தான் விவதித்துக் கொண்டிருந்தோம். ஜடேஜா சிஎஸ்கே அணியில் தொடர்வார்.

இவ்வாறு காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...