No menu items!

சாய் பல்லவி இனி இப்படிதான்!

சாய் பல்லவி இனி இப்படிதான்!

சாய் பல்லவி, இப்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடிக்கிறார். அவ்வளவுதான். வேறெந்த படமும் கைவசம் இல்லை.

என்ன காரணம்?

சாய் பல்லவி பொதுவாகவே தனக்கு அதாவது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார்.

இதனால்தான் கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளில் ஆர்வத்துடன் நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் கடைசியாக ‘கார்கி’ படம் வெளிவந்தது.

இப்படி அவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக ஒன்றும் ஆச்சர்யப்படுத்தவில்லை. இதுதான் அவரை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறதாம்.

இனி இதுபோன்ற ஆஃப் -பீட் படங்களில் நடிப்பது இல்லை. கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்தால் போதும். அதுவும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படுகிற அளவுக்கு இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாராம்.
இதனால்தான் தேடி வரும் வாய்ப்புகளை அது இது என ஏதாவது சொல்லி தவிர்த்துவிடுகிறாராம். ஒரு படத்திற்கும் அடுத்தப்படத்திற்கும் இடையே இடைவெளி அதிகமிருந்தாலும் பரவாயில்லை. நல்ல கமர்ஷியல் படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் முதலிலேயே சொல்லிவிடுகிறார் சாய் பல்லவி.


’லியோ’ – லேட்டஸ் அப்டேட்!

‘லியோ’ படத்தின் வியாபாரம் வேற லெவலில் நடக்கிறது. இந்த நடிகை நடிக்கிறார். அந்த நடிகரும் லியோவில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி ஏராளமான அப்டேட்கள் வந்தப்படியே இருக்கின்றன. அந்த வகையில் இதோ சில லேட்டஸ்ட் அப்டேட்கள்.

’லியோ’ படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் ஷூட்டிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

’லியோ’வில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத்துக்கு இப்படத்தின் கதையைச் சொல்ல லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமாருடன் மும்பைக்குச் சென்றார். அங்கே சஞ்சய்தத்திடம் ஒவ்வொரு காட்சியாக விவரித்தப்படியே கதையை சொல்லி முடித்திருக்கிறார். முழுக்கதையையும் கேட்ட சஞ்சய்தத், ‘இந்தப்படம் நிச்சயமா ஒரு ப்ளாக்ப்ஸ்டர் ஆக இருக்கும்’ என்று சொல்லியபடியேதான் கமிட் ஆகியிருக்கிறார்.
’ஒரு படத்தில் ஹீரோவை விட வில்லன் பவர்ஃபுல்லாக இருந்தால்தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்’ என்பதுதான் விஜய் அடிக்கடி சொல்வது. இப்படியொரு சூழலில், சஞ்சய்தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தால், முதல் ஆளாக போய் அவரைப் பாராட்டி கொண்டாடி இருக்கிறார் விஜய்.

‘லியோ’ படத்தில் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் ரொம்பவே தூக்கலாக இருக்கும் என்கிறது படக்குழு. சர்வதேச தரத்தில் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் இருக்கவேண்டும் என்பதற்காகவே ரொம்பவே பணத்தை இறைத்து இருக்கிறார் தயாரிப்பாளர்.

’பாகுபலி’ புகழ் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு சிஜி வேலைகளை பார்த்த அதே நிறுவனம்தான் இப்போது லியோ படத்திற்கு கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலைகளைப் பார்த்து வருகிறது.

வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் லியோவின் மார்க்கெட்டிங்கை பெரியளவில் மேற்கொள்ள தயாரிப்பாளர் தரப்பு இப்பொழுதே திட்டங்களை வகுத்து வருகிறது.


ரொமான்ஸூக்கு இந்த தலைமுறையே வேஸ்ட்!

மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைப்பதில் பாலிவுட்டில் கங்கனா ரனவத் ரொம்பவே பிரபலம்.
அவர் இப்போது டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற பெயரில், ஒரு படத்தை தயாரித்து இருக்கிறார். ‘
’பேட்ட’ ரஜினிக்கு வில்லனாக வருவாரே அதே நவாஸ்ஸூதின் சித்திக்தான் இப்படத்தில் ஹீரோ.
கதையின் படி 49 வயதாகும் நவாஸ்ஸூதின் சித்திக் தன்னைவிட ரொம்பவே வயது குறைந்த, அதாவது 21 வயதாகும் அவ்நீத் கெளர் என்கிற டிவி நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. லிப் கிஸ் காட்சியும் தூக்கலாக இருக்கிறது.

இந்த காட்சிகள் இடம்பெற்ற ட்ரெய்லரை பார்த்ததும், ஆளாளுக்கு ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

கொஞ்ம் பொறுத்துப் பார்த்த சித்திக், ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்துவிட்டார்.

’ரொமான்ஸூக்கு வயசு இல்லை. இப்பெல்லாம், வாட்ஸ் அப்பில் லவ் பண்றாங்க. அதே வாட்ஸ் அப்புல ப்ரேக் அப் ஆகிடுறாங்க. நாங்கல்லாம் காதலைக் கொண்டாடுகிற காலத்துல இருந்தது வந்தவங்க. அதனாலதான் சினிமாவுல நடிக்கும் போது கூட திரையில் அழகாக ரொமான்ஸ் செய்ய முடியுது. ஷாரூக்கான் ஏன் இன்னிக்கும் ரொமான்ஸ்ல அவ்வளவு பிரமாதமா நடிக்க முடியுது? ஏன்னென்றால் இன்னிக்குள்ள இளம் ஹீரோக்களும், இந்த தலைமுறையும் அந்த வகையில் ரொம்பவே வேஸ்ட். பிரயோஜனம் இல்லாதவங்க.’’ என்று வெளிப்படையாகவே வெளுத்து வாங்கி இருக்கிறார்.

கொசுறு செய்தி – இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக போவதில்லையாம். ஒடிடி-யில் நேரடியாகவே ஸ்ட்ரீம் ஆக இருக்கிறதாம். ஜூன் 23-ம் தேதி வரை பொறுத்தால் போதும். நவ்வாஸூதின் சித்திக்கின் ’அந்த’ ரொமான்ஸை வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...