No menu items!

விஜய்யின் வில்லன்; அஜித்தின் இயக்குநர்

விஜய்யின் வில்லன்; அஜித்தின் இயக்குநர்

அஜித் நடிக்கும் AK61 படத்தை ’நேர்க்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின்  ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கும்போதே AK62- படத்தை  விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே AK63 படம் பற்றிய கிசுகிசுக்கள்

இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித்தை வைத்து  ’வீரம்’, ’விவேகம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய  படங்களை இயக்கிய  சிறுத்தை சிவா AK63-ஐ இயக்க இருப்பதாக தற்போது பேச்சு அடிப்படுகிறது.

ஆரம்பத்தில்  புதிய இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்புகளை வழங்கிய அஜித், சமீபகாலமாக தனக்கு ஏற்கெனவே பழக்கமான,  வொர்க் பண்ணுவதற்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள  இயக்குநர்களுடன் சேர்வதையே விரும்புகிறார்.

அந்தவகையில் தன்னை வைத்து  4 படங்களை இயக்கிய சிவாவுடன் சேர்வது  என்பது சாத்தியமான ஒன்றே.    படத்தின் தயாரிப்பாளர் யார்? கதை என்ன என்பது பற்றிய தகவல்கள் இனி வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் வில்லனாகும் சஞ்சய் தத்?

விஜய் நடிக்கவிருக்கும் THALAPATHY67 படத்தை மாஸ்டர் இயக்குநர் லோகேஷ்
கனகராஜ் இயக்கவுள்ளதாக  பேச்சு அடிப்பட ஆரம்பித்ததில் இருந்தே அவரது ரசிகர்களை உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ  தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபரில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு, கன்னடப் படங்கள் தற்போது பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்து தயாரிக்கப்படுவதால்

தனது படங்களையும் பான் இந்தியா படமாக எடுக்க வேண்டுமென்ற எண்ணம் விஜய்க்கும் உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கு தீனிபோடும் வகையில் தற்போது விஜய் 67-ல் சஞ்சய் தத் வில்லனாக
நடிக்கப் போவதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.  இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இவ்வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என்ரு கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...