No menu items!

சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னா பாய் ஃப்ரெண்ட்!

சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னா பாய் ஃப்ரெண்ட்!

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார். இப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும்போதே, சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

பெயரிடப்படாத சூர்யா43 படத்தை, ’சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்குரா இயக்கவிருக்கிறார். இந்த கூட்டணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு நிலவுகிறது. இந்நிலையில் சூர்யாவுக்கு வில்லனாக, சமீபகாலமாக கவர்ச்சியில் கலந்து கட்டி நடித்துவரும் தமன்னாவின் ஆண் நண்பர் விஜய் வர்மா நடிக்க இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது.

இந்த விஜய் வர்மா ஏற்கனவே வெப் சிரீஸ்களில் சைக்கோத்தனமான வில்லனாகவும் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக, தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைப் பெற்றிருக்கும் மலையாள சினிமாவின் பஹத் ஃபாசிலின் மனைவி நஸ்ரியா நடிக்கலாம் என தெரிகிறது.

அதேபோல் பான் – இந்தியா நட்சத்திரமாக இருக்கும் துல்கர் சல்மான், சூர்யாவின் சகோதரர் ஆகவும் நடிக்கவிருக்கிறாராம்.

சூர்யா43 குறித்து இது போன்ற தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தாலும், இது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இன்னும் சில வாரங்களில் சூர்யா43 படம் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

‘டங்கல்’ என்ற ஒரே படம்தான். வசூலில் பெரும் சாதனையை படைத்தார் ஆமீர்கான். இதே கெத்துடன் அமீர்கான் ரொம்பவே எதிர்பார்ப்புடன் நடித்த ‘லால் சிங் சத்தா’ படம், அவருக்கு மரண அடி கொடுக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த ஒரு பட தோல்வியில் மனிதர் ரொம்பவே நொறுங்கிவிட்டார்.

ஹாலிவுட்டில் கலக்கிய ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் இந்திய பதிப்பான ‘லால் சிங் சத்தா’ விமர்சனரீதியாக வெளுத்து வாங்கப்பட்டது ஒரு பக்கம், வசூலில் போட்ட பணம் கூட வராதது மறுபக்கம் என சாதனை படைத்த அமீர்கானுக்கு உண்டான சோதனை, அவரை சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் முடிவுக்கு தள்ளிவிட்டது.

இதனால் தன் மகன் ஜூனைத் கானை தனக்கு பதிலாக களத்தில் இறக்க அமீர்கான் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

ஒரு அருமையான காதல் கதை. யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் தயாரிப்பு. இந்த இரண்டு அம்சங்களை மட்டுமே நம்பி அமீர்கான் ஜூனைத் கானை அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.

யஷ் ராஜ் ஃப்லிம்ஸ், இந்தாண்டில் வசூலை அள்ளிக்குவித்த ‘பதான்’ படத்தை தயாரித்த நிறுவனம். வசூலில் கல்லா கட்டிய உற்சாகத்தில் இருக்கும் இந்நிறுவனம், அதே கொண்டாட்டத்தோடு ஜூனைத் கான் நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது.

அமீர்கான் வாரிசு அறிமுகமாகும் படம். காதல் கதை. அதனால் யார் ஹீரோயின் என்ற எதிர்பார்பு உருவாகி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, தமன்னா, கீர்த்தி சுரேஷ் என தென்னிந்திய ஹீரோயின்களில் யாராவது ஒருவர் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போது சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சாய் பல்லவியும் பாலிவுட்டி எண்ட்ரீக்கு ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.


அம்மா அப்பாவைச் சந்தித்த விஜய்!

விஜய் என்கிற இன்றைய தளபதி உருவாக்கியத்தில் மாபெரும் பங்கு அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு உண்டு.

விஜய் நடிக்கவிருக்கும் படங்களின் கதைகளைக் கேட்டு, விஜய் நடிக்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்வதும் அவரது அப்பா எஸ்.ஏ.சி.தான். ‘துப்பாக்கி’ படம் வரை இதே வழிமுறையைதான் விஜய் பின்பற்றி வந்தார்.

விஜயின் அப்பாதான், விஜய் ரசிகர் மன்றத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர். ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாகவும் கொண்டு செல்ல விரும்பியவர். ’வேலாயுதம்’ படத்தின் போது விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த சர்ச்சைகள் கிளம்பிய போது, அப்பாவுக்கும் மகனுக்கு இடையில் இடைவெளி உருவானது.

ரசிகர் மன்ற விவகாரங்களிலிருந்து எஸ்.ஏ.சி. விலகியிருக்கும் சூழல் உருவானது. விஜய் மன்ற புதிய நிர்வாகிகள் விஜய்க்கு நெருக்கமாகினர்.

இந்த நெருக்கம் அப்பா, அம்மா, விஜய் இவர்கள் மூவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

இத்தனை காலமும் தனது அம்மாவுடன் மட்டுமே பேசி வந்தார் விஜய். இதனால் அப்பாவுக்கும், விஜய்க்கும் இடையில் இருந்த உரசலை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி எடுத்த விஜயின் அம்மா ஷோபா எடுத்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மட்டும் மோஷன் கேப்ச்சர் சமாச்சாரங்களுக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

தனது படம் தொடர்பான பயணத்தை முடித்து சென்னைக்கு திரும்பிய விஜய், அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட அப்பாவை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்.

இதில் விஜயின் அம்மாவுக்கு உணர்ச்சிகரமான சந்திப்பாக அமைந்துவிட்டதாம். இதுவரையில் பேசாமல் இருந்து வந்த அப்பாவும் மகனும் ஒரு சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

’ரன்’ படத்தில் அனுஹாசன் மாதவனையும் ரகுவரனையும் பார்த்து ‘நீங்க ரெண்டுப் பேரும் பேசிட்டீங்கல்ல…பேசிட்டீங்கல்ல…. அது போதும்’ என்று கண்ணீர் மல்க சந்தோஷப்படுவார்.

இன்று ஷோபாவுக்கு அதே உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.

இனி விஜயின் அரசியல் பயணத்தில் அப்பாவும் களமிறங்குவாரா என்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி. விடைக்கு இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...