No menu items!

ஷ்ருதி ஹாஸன் ரகசிய திருமணமா?

ஷ்ருதி ஹாஸன் ரகசிய திருமணமா?

ஷ்ருதி ஹாஸன் நீண்ட நாட்களாகவே தனியாகதான் வசித்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் எப்போதாவது தனது கமல் ஹாஸனைப் பார்க்க சென்னை வருவது வழக்கம். அதேபோல் அம்மாவையும் மும்பைக்குச் சென்று பார்ப்பார். முடிந்தால் அம்மாவுடன் சில நாட்கள் தங்கியிருப்பார். இப்படி தனிச்சுதந்திரத்துடன் இருப்பவர் ஷ்ருதி ஹாஸன்.

இப்படிப்பட்ட ஷ்ருதி வாழ்க்கையில் இணைந்திருப்பவர் அவரது நண்பர் ஷாந்தனு ஹசரிகா.

இப்போது இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஷ்ருதி ஹாஸன் இதுவரை கூறி வருகிறார்.

ஆனால்ல்ல்… அதில்தான் இப்போது குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். காரணம் ஷ்ருதியின் நண்பர் ஒருவர் இணையத்தில் போட்டிருக்கும் பதிவு.

ஒர்ஹான் அவாத்ரமனி அதாவது ஓர்ரி என்றழைக்கப்படும் இவர், ஷாந்தனு மற்றும் ஷ்ருதிக்கு நெருங்கிய நண்பர். இவர் இதர நடிகைகளுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது, ஷ்ருதி ஹாஸன் நடந்து கொண்ட விதம் பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார்.

அதில், ஷ்ருதி ஹாஸனுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்நிகழ்வில் புகைப்படங்கள் எடுப்பதற்கு கேட்காத போதும் கூட அவர் நடந்து கொண்ட விதம் கொஞ்சம் கடுமையாக இருந்தது.

இதுபற்றி ஒர்ரி கூறிய போது, ‘ஷாந்தனு ஹசரிகா ஷ்ருதி ஹாஸனின் நீண்ட நாள் நண்பர். பாய் ஃப்ரெண்ட். அவருடைய கணவர் என்றும் சொல்லியிருக்கிறார். ஷ்ருதி ஹாஸனின் ரகசிய திருமணம் பற்றி பல யூகங்கள் அடிப்பட்ட நிலையில் ஒர்ரி இப்படி கூறியிருப்பது ஷ்ருதி – ஷாந்தனு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்பதை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

இதற்கு முன்பாக ஷ்ருதியிடம் நீங்கள் ஷாந்தனுவை திருமணம் செய்து கொள்வீர்களாக என்று அவரது ரசிகர்கள் கேட்ட போது, அந்த கேள்விக்கு நாசூக்காக பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். மேலும் தனது மொபைல் கேமராவை ஷாந்தனுவை பக்கம் திருப்பி விட்டார்.

இதனால் ஷாந்தனு என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களிடம் அவரும் நாசூக்காக நழுவிக்கொண்டார். திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றால் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். நழுவிப்போக காரணம் அதில் ஏதோ இருக்கிறது என்று ரசிகர்கள் கணக்குப் போட்ட நிலையில்தான் ஒர்ரி இப்படி கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...