No menu items!

மகள் மீது வருத்தத்தில் ரஜினி!

மகள் மீது வருத்தத்தில் ரஜினி!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ரஜினி கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் முதலில் அறிவித்து இருந்தது.
ரஜினியுடன், சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ‘தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ என நேரடி தமிழ்ப்படங்களும், ஹிந்தியில் விஜய் சேதுபதியும், காத்ரீனா கைஃப்பும் நடித்த ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தின் தமிழ் டப்பிங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இவையனைத்தும் பெரியப் படங்கள் என்பதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் ‘லால் சலாம்’ பொங்கல் போட்டியிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் விலகிக்கொண்டிருக்கிறதாம். அதேபோல் சுந்தர்.சி.யின் ’அரண்மனை 4’ படமும் பொங்கலுக்கு இல்லை என்கிறார்கள்.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ‘மிஷன் சாப்டர் 1’ என்றப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப்படம் தான் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறதாம்.

ஐஸ்வர்யாவின் ’லால் சலாம்’ பொங்கல் போட்டியில் இருந்து விலக காரணம், வசூலை அள்ளுமா அள்ளாதா என்ற கவலை இல்லையாம். இது வேறு ஒரு பிரச்சினை என்கிறார்கள்.

ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை எடிட்டிங் செய்ய பயன்படுத்திய போது, அந்த காட்சிகள் எதுவும் இல்லாமல் போனதால் ஐஸ்வர்யா உட்பட லைகாவும் திகைத்துப் போனது நினைவிலிருக்கலாம். அந்தக் காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டிய சூழல் உருவானதால், அப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதுவும் வெளியீடு தள்ளிப் போனதற்கு காரணமில்லையாம். இதுவரையில் எடுத்த காட்சிகளை ரஜினிக்கு ஐஸ்வர்யா திரையிட்டு காட்டினாராம். அதைப் பார்த்த ரஜினிக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்ததாம். காரணம் ரஜினிக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.

அத்தோடு ஐஸ்வர்யாவிடம் பல காட்சிகளை மாற்றி எடுக்கும் வகையில் பல திருத்தங்களையும் சொல்லியிருக்கிறாராம். இதனால் மீண்டும் ஷூட் செய்யவேண்டிய நிலை இருப்பதால், பொங்கலுக்குள் அவற்றை ஷூட் செய்து வெளியிடுவது என்பது சாத்தியமில்லை என்பதால்தான் ‘லால் சலாம்’ தள்ளிப் போய் இருப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.


சொத்துக்களை விற்கும் ஸ்ரீதேவியின் குடும்பம்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் கவர்ச்சிக்கன்னியாக இந்தியாவையே தனது அழகினாலும், நடிப்பினாலும் கட்டிப்போட்ட ஸ்ரீதேவி நடித்தப் படங்கள் ஏராளம். சம்பாதித்ததும் தாராளம்.

தனக்கு திருமணமானதும் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தவர், மீண்டும் வெள்ளித்திரைக்கே வந்துவிட்டார். ஒரே காரணம் தனது கணவர் எடுத்தப்படங்களால் ஏற்பட்ட நஷ்டம். இதைச்சரிக்கட்ட அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அந்த சூழலில்தான் இறந்தும் போனார்.

ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, அவரது கணவர் போனிகபூர் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார். சில படங்கள் வெற்றி. சில படங்கள் தோல்வி. வருமானம் வந்தாலும் என்ன காரணத்தினாலோ இப்போது படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

இப்போது அவரது வாரிசுகள் ஜான்வி மற்றும் குஷி இருவரும் நடிப்பதில் அதிக அக்கறைக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதனால் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு ஆடம்பர பங்களாவை இந்த சகோதரிகள் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் போனி கபூர் மும்பையில் இருக்கும் 4 அப்பார்ட்மெண்ட்களை விலைக்கு விற்று இருக்கிறாராம். இந்த நான்கு அப்பார்ட்மெண்ட்களும் சுமார் 12 கோடிக்கு விலைப் போயிருக்கின்றன. இதில் மும்பை அந்தேரியில் இருக்கும் இரு க்ரீன் ஏக்கர்ஸ் எரேனா அப்பார்ட்மெண்ட்களில் ஒவ்வொன்றும் 4 கோடியாம். இந்த அப்பார்ட்மெண்ட்களை ஸ்ரீதேவியும், போனி கபூரும் சேர்ந்து வாங்கியிருக்கிறார்கள்.
இப்படி போனியும் ஸ்ரீதேவியும் சேர்ந்து வாங்கிய சொத்துக்களை விற்கவும் திட்டமிட்டு இருப்பதாக அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகிறார்கள்.

ஜான்வி கபூர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறாராம். அதனால் அதற்கான முதலீட்டுக்காக இதை விற்று இருக்கலாம் என்றும் நண்பர்கள் வட்டாரம் சொல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...