No menu items!

அன்று கமல் சொன்னார் – இன்று ஆந்திரா செய்கிறது!

அன்று கமல் சொன்னார் – இன்று ஆந்திரா செய்கிறது!

கோவிட்டின் போது திரைப்படம் பார்க்க திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அது இப்பொழுதும் தொடர்கிறது. மேலும் ஒடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளுக்கு குடும்பங்களாக வந்து படம் பார்க்கும் வழக்கமும் குறைந்துவிட்டது.

இதனால் ஆந்திரா மாநில அரசு புதிய திட்டமொன்றை அறிவித்திருக்கிறது. ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் ஃபைபர்நெட் லிமிடெட், இனி தனது தளத்தில் புதிய படங்களை ஸ்ட்ரீமிங் செய்யும். ஒரு புதுப்படம் வெளியாகும் அதே நாளில் முதல் காட்சியை உங்களது வீட்டில் இருந்தபடியே பார்த்து ரசிக்கலாம். குடும்பத்தோடு பார்ப்பதற்கு கட்டணம் வெறும் 99 ரூபாய்தான் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஆந்திர மாநில அரசின் இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களிடையே கிலியை கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே யாரும் திரையரங்குகளுக்கு வருவது இல்லை. இப்போது புதுப் படங்கள் வெளியாகும் நாளில் முதல் காட்சியை இப்படி ஸ்ட்ரீமிங் செய்தால் பிறகு திரையரங்குகளை இழுத்து மூடிவிட்டு வேற வேலைப் பார்க்க கிளம்ப வேண்டியதுதான் என்ற முணுமுணுப்பு அவர்களிடையே கேட்க ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், இந்த முயற்சி குறித்து பேசிய அம்மாநில அமைச்சர் கெளதம் ரெட்டி, ‘திரையரங்கு உரிமையாளர்கள் கவலைப்பட தேவை இல்லை. திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை இதனால் குறையாது. புதுப்படத்தயாரிப்பாளர்கள் ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் ஃபைபர்நெட் லிமிடெட்டை அணுகினால் அவர்களது படங்களை ஸ்ட்ரீமிங் செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் ஃபைபர்நெட் லிமிடெட், ஆந்திரா முழுவதிலும் ஒஎஃப்சி எனப்படும் ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை பதிக்கும் முயற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டது. ஆந்திராவை முழுவதும் சேர்த்து மொத்தம் 55,000 கிமீ வரை ஒஎஃப்சி கேபிளை பதிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதில் இப்போது 37,000 கிமீ வரை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதன் மூலம், 11,254 கிராமப்பஞ்சாயத்துகளும், 7,600 கிராமங்களும் ஃபைபர்நெட் மூலம் இணைக்கப்பட்டுவிட்டன.

இந்த முயற்சிக்கு திரைப்பட படைப்பாளிகள் மட்டும் நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனுமதித்தால், அது திரையரங்குகளை மூடுவதற்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

ஆனால் பெரிய படங்களோ, பெரிய நட்சத்திரங்களின் படங்களோ இந்த மாதிரியான ரிலீஸை விரும்பப்போவது இல்லை. திரையரங்குகளில் திரையிட முடியாத, ஒடிடி-யில் ஸ்ட்ரீமிங் செய்ய முடியாத, சிறுப்படத்தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஆந்திர அரசின் இந்த முயற்சி கைக்கொடுக்கும். அதனால் மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ஆந்திர அரசின் இந்த முயற்சியை, 2013 ஆண்டிலிலேயே நம்மவர் கமல்ஹாசன் முயற்சி செய்திருந்தார் என்பதுதான் இதில் ஹைலைட். விஸ்வரூபம் படம் வெளியிடுவதை இதைப் போல்தான் கமல் திட்டமிட்டு இருந்தார். அதாவது தனது படத்தை டைரக்ட் டு ஹோம் எனப்படும் டிடிஹெச் மூலம் மக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க முடியும் என கமல் கூறியது நினைவிலிருக்கலாம். ‘விஸ்வரூபம்’ படத்தைப் பார்க்க 1000 ரூபாய் செலுத்தினால் போதும் என்றார் கமல்.


ஐஸ்வர்யா ராஜேஷின் மறுபக்கம்!

’நான் பக்கா தெலுங்குப் பொண்ணு. ஆனா தெலுங்குல பெரிய பட வாய்ப்புகள் ரொம்ப கம்மியாதான் வருது. எங்கப்பா நிறைய தெலுங்குப் படங்கள்ல நடிச்சிருக்காரு. எங்க தாத்தாவும் நிறைய தெலுங்குப் படங்கள்ல நடிச்சிருக்காங்க. எங்க அத்தை, 500-க்கும் அதிகமான தெலுங்குப் படங்கள்ல நடிச்சிருக்காங்க. இந்த மாதிரி ஒரு சினிமா பேக்-கிரவுண்ட் எனக்கு இருக்கு. ஆனாலும் எனக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வர்றது இல்ல. இதனாலதான் இங்கே இருக்கிறத விட்டுட்டு நான் சென்னையில் தங்கியிருக்கேன். தமிழ்ப்படங்கள்தான் பண்றேன். ஆனா எங்க வீட்டுல தெலுங்குதான் பேசுவோம். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன் அவ்வளவுதான். ஆனா இங்கே தெலுங்குல எனக்கு பெரிய படங்கள் வர்றது இல்ல’ இப்படி உருகி உருகிப் பேசியிருப்பவர் வேறு யாருமல்ல.
ராஷ்மிகா மந்தானா பற்றி கமெண்ட் அடித்ததாக சர்ச்சைக்கு உள்ளான அதே ஐஸ்வர்யா ராஜேஷ்தான்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்த ’ஃபர்ஹானா’ படத்தின் ப்ரமோஷனுக்காக தெலுங்கு பக்கம் போனார். அங்கே அவர் பேசியதுதான் வில்லங்கமானது.

ஐஸ்வர்யா ராஜேஷ், நடிப்பதில் திறமைசாலிதான் என்றாலும் அவருக்கு ராஜேஷூக்கு தற்போது முன்னணி கர்ஷியல் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வருவது இல்லை. பெண்களை மையமாக கொண்ட படங்கள், இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் வருவதால் கமர்ஷியல் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இந்த பிரச்சினையில் இருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும், அடுத்து சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் தெலுங்கு சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்ற இரட்டை இலக்குகளை மனதில் வைத்துதான்

ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா பெயர் ராஜேஷ். இவர் தெலுங்கு சினிமாவில் முன்பு பிரபலமான நடிகராக இருந்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் அம்மா ஒரு க்ளாஸிக்கல் டான்ஸர். தாத்தா அமர்நாத், பழம்பெரும் நடிகர். அவரது அத்தை ஸ்ரீலக்‌ஷ்மி பல ஆண்டுகளாக புகழ்பெற்ற குணசித்திர நடிகையாக வலம்வந்தவர். 500 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இப்படியொரு தெலுங்கு சினிமா பின்னணி. இருப்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.


தொடரும் பிரச்சாரப் படங்களின் பஞ்சாயத்து!

இப்பொழுதெல்லாம் மிக சுமாராக எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை கிளப்புகின்றன. பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டுகின்றன. மொழிகள் கடந்து வெளியாகி விவாதங்களை உருவாக்குகின்றன.

இதற்கெல்லாம் காரணம் சில அரசியல் கட்சிகள், அந்தந்தப் படங்களுக்குப் பின்னால் இருப்பதுதான் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

உதாரணத்திற்கு, ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘த கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள்.

இந்தப் படங்கள் வரிசையில் ‘The India House’ மற்றும் ‘Swatantrya Veer Savarkar’ போன்ற படங்கள் சர்ச்சையைக் கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வீர் சாவர்கரை மகாத்மா காந்தியை விட மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரராக முன்னிறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி மற்றுமொரு படமும் களத்தில் இறங்க இருக்கிறது. 2002-ல் இந்தியா முழுவதிலும் அதிர்வலையை உருவாக்கிய கோத்ரா சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘கோத்ரா’ என்ற படம் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பார்வை விளம்பர போஸ்டரில் ‘Accident or Conspiracy’ என்றும் ஒரு வரியை வைத்திருக்கிறார்கள். இதுதான் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில், சினிமாவை அரசியல் கட்சிகள் கையிலெடுத்து இருப்பது, என்னென்ன விளைவுகளை உருவாக்க போகிறதோ

என்று கவலையில் இருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

ஆனால் முன்னணி கமர்ஷியல் படைப்பாளிகள் பலர் இதுபோன்ற படங்களைக் கிழித்து தொங்கவிட்டாலும், அடுத்தடுத்து பிரச்சார திரைப்படங்கள் வெளிவருவது சினிமாவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற முணுமுணுப்பு சினிமா வட்டாரத்தில் ஒலிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...