No menu items!

ஈரோடு கிழக்கு – அதிமுக படுதோல்வி – 9 கேள்விகள்

ஈரோடு கிழக்கு – அதிமுக படுதோல்வி – 9 கேள்விகள்

ஈரோடு கிழக்கில் எல்லோரும் எதிர்பார்த்த முடிவுதான். இந்தத் தேர்தலில் எல்லோரும் ஆர்வப்பட்ட விஷயம் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஜெயிக்கிறது என்பதுதான்.

இதுவரை உள்ள நிலவரத்தின்படி சுமார் 51ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஜெயிக்கிறது.

2021 பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றது.

2021 இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரசின் யுவராஜ் பெற்ற வாக்குகள் 58,396. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவேரா திருமகன் பெற்ற வாக்குகள் 67,300.

இன்று அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிக வித்தியாசத்தில் இந்தத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றிருக்கிறார்.

இந்தத் தேர்தல் அதிமுகவின் எதிர்காலம் குறித்து 10 கேள்விகளை எழுப்புகிறது.

கடந்த முறை அதிமுக கூட்டணியின் வாக்குகள் 58 ஆயிரமாக இருந்தது. இந்த முறை அந்த வாக்குகள் மிகக் கடுமையாக குறைந்திருக்கிறது. சுமார் 20 ஆயிரம் வாக்குகள் குறைந்திருக்கின்றன.

  1. அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருகிறதா? அதற்கு காரணம் அதிமுகவில் உள்ள பிளவா? எடப்பாடியின் தலைமையா?
  2. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்திலேயே வாக்குகள் குறைகிறது என்றால் தமிழ்நாட்டின் மற்ற மண்டலங்களில் நிலை என்ன?
  3. பண பலம், அதிகார பலம், ஆளும் கூட்டணி இப்படி பல சக்திகள் திமுக கூட்டணிக்கு துணையாக இருந்தன என்று சொல்வதில் நிச்சயம் உண்மை இருக்கிறது. பணம் விளையாடியது என்பதை அன்றாடம் செய்திகளில் நாம் அறிந்தோம்.திமுக கூட்டணி போல் அதிமுக கூட்டணி பணம் செலவழித்த செய்திகளையும் பார்த்தோம். அப்படியென்றால் அதிமுகவின் விசுவாசமிக்க வாக்கு வங்கி வாக்குகள் என்னவாயின? பணத்தினால் அதிமுகவின் வாக்குகளை வாங்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
  4. இடைத் தேர்தல் பரப்புரை சூழலில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அவர்தான் அதிமுக என்று அந்த தீர்ப்பு சொல்லாமல் சொல்லியது. ஆனால் இடைத் தேர்தலில் அதற்கு எந்த தாக்கமும் ஏற்பட்டது போல் தெரியவில்லை. அந்த தீர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?
  5. ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம். அந்த வாக்குகள் அதிமுகவுக்கு சென்றதா? சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம் பாஜக கூட்டணியா?
  6. எடப்பாடி தலைமையில் அதிமுகவுக்கு தொடர் தோல்விகள்தாம் கிடைத்திருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். 2017ல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடங்கி 2019 நாடாளுமன்றத் தேர்தல், 22 தொகுதி இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப் பேரவைத் தேர்தல், இப்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் என தொடர்ந்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. இத்தனை தோல்விகளை தந்த எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கத் தலைவரா?
  7. இரட்டை இலை சின்னம் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்ற கருத்து உண்டு. இரட்டை இலையின் செல்வாக்கு ஏன் இப்போது இல்லை?
  8. இந்தப் படுதோல்வியினால் ஓபிஎஸ் மீண்டும் அதிமுக அரசியலுக்குள் வருவாரா? அவரது செல்வாக்கு கூடுமா?
  9. எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா அனைவரும் இணைந்தால்தான் அதிமுகவின் பழைய செல்வாக்கு திரும்புமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...