No menu items!

ஈரோடு இடைத்தேர்தல்: 66406 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி

ஈரோடு இடைத்தேர்தல்: 66406 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் பின்தங்கினர்.

இந்நிலையில், 15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 109959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43553 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 949 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவன் 66406 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு: டெபாசிட்டை தக்க வைத்த அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 13 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது. 14ஆவது சுற்று எண்ணப்பட்டு வருகிறது.

முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு டெபாசிட்டை தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், 10ஆவது சுற்று முடிவில் 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார், தென்னரசு.

3 மாநில தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கே பாஜக கூட்டணி 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.) – பா.ஜனதா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகள் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலையில், மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் இழுப்பறியில் உள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம்.  முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கிறோம். இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள். பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் . விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...