No menu items!

அஜித்திற்கு பதில் விஜய்சேதுபதி!

அஜித்திற்கு பதில் விஜய்சேதுபதி!

லேடி சூப்பர் ஸ்டாரின் படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ரவுடி பிக்சர்ஸ்’. அந்த பெயருக்கேற்ற கெத்து, தனது செயலிலும் இருக்கவேண்டுமென லேடி சூப்பர் ஸ்டார் நினைப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

அப்படியா என்று கேட்டால், ஆமாம் இப்படிதான் என ஒரு பேக் க்ரவுண்ட் கதையை இறக்கிவிடுகிறது கோலிவுட்.

’அஜித் 62’ ப்ராஜெக்ட்டிலிருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்டதினால் நயன்தாரா ரொம்பவே அப்செட். லைகா மீது வருத்தம், விக்னேஷ் சிவன் மீது கோபம் என்று சில நாட்கள் இருந்த நயன்தாரா, இப்போது களத்தில் இறங்கியிருக்கிறாராம்.

அஜித்திற்கு சொல்லி ஓகே ஆன அதே கதையை படமாக எடுத்து, ஹிட்டாக்கி காட்டுவதுதான் இப்போதைய திட்டமாம். அஜித்திற்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் வர, நயனும் விக்கியும் தங்களது குழுவினருடன் டிஸ்கஷனில் இறங்கியிருக்கிறார்களாம்.

இந்நிலையில் சுந்தர். சி இயக்கத்தில் ‘அரண்மனை -4’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே முடிவாகி இருந்தது. இப்பொழுது கால்ஷீட் பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதி அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகியிருப்பதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் இந்த முடிவுக்கு காரணம் நயன்தாரா என்பதுதான் இப்போதைய சூடான கிசுகிசு.

அஜித்திற்கு பதிலாக விஜய் சேதுபதியை வைத்து அதே கதையை எடுக்கும் வேலைகளில் இப்போது விக்னேஷ் சிவன் மும்முரமாக இருப்பதாகவும், நயன் கேட்டுக்கொண்டதால்தான் ‘அரண்மனை-4’ படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை இப்பொழுது விக்கி இயக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அடடா இது அல்லவா ஆடுப்புலி ஆட்டம் என கோலிவுட்டில் கண்சிமிட்டுகிறார்கள்.

#nayanthara, #ak, #ajith, #ajith62, #wikki, #lyca, #vijaysethupathy, #makkalselvan, #aranmanai, #sundarc,


ப்ரித்வி ராஜ் இயக்கத்தில் சூர்யா?

மலையாள ஹீரோவான ப்ரித்வி ராஜ், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’, ப்ரோ டாடி’ என இரண்டு கமர்ஷியல் படங்களை இயக்கினார். இரண்டுப் படங்களும் சூப்பர் ஹிட்.

இப்போது லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால், மோகன் லாலுக்கு அடுத்து ப்ரித்வி ராஜ் சூர்யாவை வைத்து படமொன்றை இயக்கப் போவதாகவும், இந்தப் படம் ’பிஸ்கட் மகாராஜா’ என்றழைக்கப்படும் ராஜன் பிள்ளையின் பயோபிக் ஆக இருக்கும் என செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

இந்த பிஸ்கெட் மகாராஜா பயோபிக், ஒரு ஒடிடி-க்காக எடுக்கப்பட இருக்கிறதாம்.

சூர்யா – ஜோதிகா ஜோடியை ப்ரித்வி ராஜ் தனது மனைவியுடன் கடந்த ஜனவரி மாதம் சந்தித்தார். இந்த சந்திப்பினால் இப்பொழுது இந்த பயோபிக் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

#Suriya, #RajanPillai, #biscuitking, #Mohan Lal, #Lucifer, #Suriya42,


மீண்டும் வைரல் ஆன வாரிசு தயாரிப்பாளர்!

விஜயின் ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூ.’டான்ஸ் வேணுமா.. டான்ஸ் இருக்கு. ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு’ என்று மேடையில் விஜய் ரசிகர்களைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை வைத்து ட்ரோல்கள் பறந்தன.

ஒரே நாளில் தில் ராஜூ தமிழ்நாட்டில் பிரபலம் ஆனார்.

இந்த ட்ரோல் முடிந்து கொஞ்ச நாட்கள் கூட ஆகவில்லை. அதற்
குள்ளாகவே மீண்டும் வைரல் ஆகி இருக்கிறார் தில் ராஜூ,

’பாலகம்’ என்ற தெலுங்குப் படவிழாவில் பேசிய தில் ராஜூ, ‘வாரிசு படம் மாதிரி இந்தப் படத்தில் ’டான்ஸ் இல்ல. ஃபைட் இல்ல. விஜய் பாடிலாங்வேஜ் இல்ல.. ஆனா என்டர்டெயின்மெண்ட் இருக்கு. தெலுங்கானாவின் நேட்டிவிட்டி இருக்கு’ என்று தன்னுடைய பாணியில் கூறினார்.

இதனால் தில் ராஜூவை பற்றிய ட்ரோல்களும், மீம்களும் இப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி இருக்கிறது.

#Producer, #DilRaju, #troll, #Thalapathy, #Vijay, #Varisu, #DanceVenuma, #Balagam,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...