No menu items!

மீண்டும் இந்தியன் – 2

மீண்டும் இந்தியன் – 2

கிடப்பில் போட்டிருந்த இந்தியன் – 2 பட வேலைகள் தொடங்கிவிட்டன.

படத்தயாரிப்பில் லைகாவுடன் இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸூம் களத்தில் இறங்கி இருப்பதால் இந்தியன் சமாச்சாரம் சூடுப்பிடித்திருக்கிறது.

சென்னை பாரிஸ் கார்னருக்கு அருகில் இந்தியன் – 2 படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான செட் போடப்பட்டிருக்கிறது. இங்குதான் ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கமல் செப்டெம்பர் 5-ம் தேதி ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

கமலை ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் வரை காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷூட் செய்ய இருக்கிறார் ஷங்கர்.

நடிகைகளைப் பொறுத்தவரை, இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

இந்தியன் – 2 படத்தின் 70% காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு விட்டன.

தனது அறிமுகப் படமான ‘ஜென்டில்மேன்’ முதல் ஷங்கரின் ஃபேவரிட் மியூசிக் டைரக்டர் ஏ.ஆர். ரஹ்மான்தான். ஆனால் ‘அந்நியன்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜூடன் கைக்கோர்த்த ஷங்கர், முதல் முறையாக இப்படத்தின் இசைக்காக அனிரூத் ரவிச்சந்திரனுடன் சேர்ந்திருக்கிறார்.

பாலாவினால் மலையாளத்திற்கு தாவிய கீர்த்தி ஷெட்டி!

கன்னட சினிமாவிலிருந்து கிளம்பி, தெலுங்கு சினிமாவில் செட்டிலாகி இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என திட்டமிட்டு இருந்தார்.

அதனால்தான் மிக ஆர்வமாக ‘த வாரியர்’ படத்தில் கமிட்டானார். ஆனால் அந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், கீர்த்தி செம அப்செட்டாம்!

இதனால் பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ‘வணங்கான்’ படத்தைதான் ரொம்பவே நம்பியிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. கூடவே சொன்ன மற்றொரு தகவல், பாலா படத்தில் நடித்தால் பெயர் கிடைக்கலாம், ஆனால் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. அதனால் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்யவேண்டுமென கீர்த்தி ஷெட்டி உஷாராக இருக்கிறாராம்.

ஆனால் பாலா படம் எப்பொழுது முடியுமென்பது தீர்மானமாக தெரியவில்லை. அடுத்து வேறு தமிழ்ப்படங்களிலும் உடனடியாக நடிக்க முடியாத சூழல் என்பதால் மலையாளப் படங்கள் பக்கம் தனது மேனேஜரை ஒரு ரவுண்ட் அடிக்க வைத்திருக்கிறாராம்.

அதற்கு உடனடியாக பலன் கிடைத்திருக்கிறது. டோவினோ தாமஸ் படத்தில் கமிட்டாக இருக்கிறாராம் கீர்த்தி ஷெட்டி.

ஜெயிலரில் தமன்னா ஹீரோயினா?

’ஜெயிலர்’ போஸ்டர் வெளியானதுமே கோலிவுட் பரபரப்பாகி இருக்கிறது. காரணம் ரஜினியினி அந்த மெச்சூர்ட் மாஸ் லுக்.

இதனால் ரஜினி ஜோடி யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

’ஜெயிலர்’ படத்தில் கமிட்டாகி இருக்கும் தமன்னா ரஜினிக்கு ஜோடியா என்று விசாரித்தால் இல்லை என்கிறார்கள்.

தமன்னாவுக்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை. அதாவது கதாநாயகி வேடம் இல்லையாம். கொஞ்ச நேரம் வந்தாலும் நச்சென்று மனதில் பதிகிற மாதிரியான கேமியோ ரோல்தானாம்.

அப்புறம் எதற்கு தமன்னா இதில் கமிட்டானார் என்று கேட்டால், ரஜினியோடு நடிக்கவேண்டுமென்பது தமன்னாவின் நீண்ட நாள் ஆசையாம். அதற்காகவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...