No menu items!

ஜெயம் ரவி –  ஆர்த்தி விவாகரத்தா?  – என்ன நடக்கிறது?

ஜெயம் ரவி –  ஆர்த்தி விவாகரத்தா?  – என்ன நடக்கிறது?

தமிழ் சினிமாவில் திருமணம் ஆன ஜோடிகளில் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்பட்டவர்கள் ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி.   திரையுலகின் ராசியான தம்பதிகளாக பார்க்கப்பட்ட இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சில நாட்களாக தகவல் பரவி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகில்  பெரிய அனுபவம் உள்ள எடிட்டர் மோகனின் இளையமகன் தான் ஜெயம் ரவி.  எடிட்டர் மோகன்தான்  தமிழ் சினிமாவிற்கு டப்பிங் படங்களை அறிமுகம் செய்து அதை வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தில் கொண்டு சேர்த்தவர். அதிசய விலங்குகளும் அற்புத பறவைகளும், சர்க்கஸ்  போன்ற திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய லாபத்தைக் கொடுத்த படங்கள். அந்த வகையில் சினிமாவில் வித்தை தெரிந்த மனிதராக இருப்பவர். திரையுலகில் அனைத்து நுட்படங்களைம் தெரிந்தவர் என்பதால்  தன் மகன்களையும் சினிமாவில் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டு வந்தார். 

குறிப்பாக ரவிக்கு  ஒரு கதாநாயகனுக்கு தேவையான அனைத்து திறமைகளையும் கொடுக்க வேண்டும் என்று  நடனம் தற்காப்புக் கலை என்று  அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து வந்தார். ரவிக்கு பரதநாட்டியம் நன்றாக தெரியும்.  அதில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டு  அவரதுநடை பாவனைகளில்  நளினம் அதிகமாக இருந்ததால் அவரை பரதம் வகுப்பிலிருந்து ஜிம்னாஸ்டிக்  வகுப்பில் சேர்த்து வீட்டார்,  

இப்படி ரவியை சினிமாவி்ற்காக தயார் செய்து தனி கவனம் எடுத்து வளர்த்து ஹீரோவாகவே மாற்றிக் காட்டினார். மூத்த மகன் ராஜா இயல்பாகவே இயக்குனராகவேண்டும் என்ற ஆசையில் இருந்ததாவ் அவர் போக்கிலேயே விட்டுவிட்டார். பிறமொழி படங்களை தமிழில் எடுத்து வெளியிட்டு அதில் ராஜா வெற்றி பெற்றார். அப்படி எடுத்த ஜெயம் திரைப்படத்தில்  ரவியை முதன் முதலில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். பெரிய வெற்றி பெற்ற அந்தப் படத்தின் பெயரே அவருக்கு அடையாளமாகி விட்டது. 

அண்ணன் ராஜா இயக்கத்தில் ரவி நடித்த பல படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்து அவருக்கு ஒரு அந்தஸ்த்தை கொடுத்தது. இந்த நிலையில் திரையுகினர் கூடி சந்திக்கும் ஒரு சந்திப்பில் தான் சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பில் வெற்றிகரமாக இயங்கி வந்த சுஜாதா விஜயகுமார் ஆகியோரின் மகள் ஆர்த்தியை சந்தித்தார் ரவி. முதல்ச் சந்திப்பு காதலாக மாற இருவீட்டாரும்  பேசி தங்கள் பிள்ளைகளின் காதலை திருமணத்தில் முடித்து வைத்தனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர். 

பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் பிராதானமான பாத்திரமான  இராஜராஜசோழன் வேடத்தில் அருண்மொழிவர்மனாக நடித்தார் ரவி.  இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  ஒரு பாடகியும் நடிகையுமான ஒருவர் அவரை சந்தித்ததாகவும் அவருடன் காதல் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது., அதோடு  தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரியிருப்பதாகவும் தகவல்கள் தீயாய் பரவியது. இதனை மறுக்கும் விதமாக ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் ஆர்த்தியோடு இருக்கும் படத்தை பதிவிட்டு இல்லை என்றிருக்கிறார்.

இப்போது புதிய தகவலாக ஆர்த்தி விவாகரத்திற்கு மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் ஆனால் உள்ளுக்குள் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.  இது தொடர்பாக எடிட்டர் மோகன், அவரது மகன் ராஜா, ஜெயம் ரவி பலரையும் தொடர்புகொண்டு பேச முயன்றும் முடியாத சூழலில் அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

நேரடியாக இதற்கு இருவரும் சேர்ந்து விளக்கம் கொடுத்தாலன்றி விவாகரத்து செய்தி பரவுவதை தடுக்க முடியாது என்பதே நிஜம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...