No menu items!

IPL 2025 – யார் உள்ளே? யார் வெளியே?

IPL 2025 – யார் உள்ளே? யார் வெளியே?

ஐபிஎல் 2025 தொடரில் தங்கள் அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம் தக்கவைக்க விரும்புகின்றன என்பதைப் பார்ப்போம்…

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தோனி ஆகிய 4 வீரர்கள்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்கள். இவர்கள் நால்வரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைப்பது உறுதி.

இந்த 4 வீர்ர்களைத் தவிர இலங்கை வேகப்பந்து வீசசாளரான பதிரணா அல்லது நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரரான டெவன் கான்வே ஆகிய இருவரில் யாராவது ஒருவரை ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி அந்த அணி தக்கவைக்கலாம்.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஹர்த்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்களை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி டிம் டேவிட்டை அந்த அணி தக்கவைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இஷான் கிஷனை அணியில் இருந்து விடுவிக்கும் மூடில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரல் ஆகியோர் கடந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் இந்த முறையும் அவர்களை ராஜஸ்தான் அணி தக்கவைக்கும். இவர்களைத் தவிர அஸ்வின், சாஹல் ஆகியோரை ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி ராஜஸ்தான் அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இம்முறை எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறது. இப்போதைக்கு விராட் கோலி, முகமது சிராஜ், ரஜத் படிதார் ஆகியோரை மட்டுமே தக்கவைக்கும் மூடில் அந்த அணியின் நிர்வாகம் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கடந்த ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அதற்கு முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், ஆந்திரே ரஸ்ஸல், ரிங்கு சிங், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை தக்கவைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடந்த முறை இறுதிப் போட்டிவரை முன்னேறிய அணி சன்ரைசர்ஸ். அதற்கு அந்த அணியின் வலுவான பேட்டிங் ஒரு காரணமாக இருந்தது. அதனால் இந்த முறையும் அதிரடி பேட்ஸ்மேன்களான ஹென்ரிச் கலாசன், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ்குமார் ரெட்டி, கம்மின்ஸ் ஆகியோரை தக்கவைப்பதில் அந்த அணி கவனம் செலுத்தும்.

அதே நேரத்தில் புவனேஸ்வர் குமார், தமிழக வீர்ர் டி.நடராஜன் ஆகியோரை அந்த அணி கழற்றிவிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

டெல்லி கேபிடல்ஸ்:

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரிஷப் பந்த் அதில் இருந்து விலக விரும்புவதாக கூறப்படுகிறது. அவரது முடிவைப் பொறுத்தே அணியின் மற்ற வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் தக்கவைக்கும்.

அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜேக் ஃப்ரேஸர் மெக்கர்க் ஆகியோரை தக்கவைப்பதில் அந்த அணி அதிக ஆர்வம் காட்டுகிறது.

இதைத்தவிர சாம் கரன், அர்ஷ்தீப் சிங், சஷாங் சிங், அசுதோஷ் சர்மா ஆகியோரை பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல், டி காக், நிகோலஸ் பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐபிஎல்லில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மான் கில், ரஷித் கான், முகமது ஷமி ஆகியோரை மட்டும் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...