கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.
“அது இளையராஜவுக்குதான் தெரியும். நான் உனை நீங்க மாட்டேன்னு அவர் பாடுனது ரசிகர்களை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்று இணையத்தில் ராஜாவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தார் ரகசியா.
தோனியேகூட இனி ஆடமாட்டார் என்று கூறப்பட்டது. 2020 தொடர்தான் தோனியின் கடைசி தொடர் என்றும் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடைசி சில போட்டிகளின்போது எதிரணிகளைச் சேர்ந்த வீரர்கள் தோனியிடம் இருந்து அவரது ஜெர்சியை பரிசாக வாங்கினர்.