No menu items!

ஏ.கே.61 – ஹீரோயின் ரகுலுடன் தீபாவளிக்கு வரும்!

ஏ.கே.61 – ஹீரோயின் ரகுலுடன் தீபாவளிக்கு வரும்!

‘வலிமை’ திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அஜித்குமாரின் 61-வது படத்தில் மீண்டும் இணைகிறது.

’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் சுமார் மூன்று ஆண்டுகள் மெகா சீரியல் ஷூட்டிங் போல் நடந்தது. இதனால் ஒருபக்கம், ஏகே ரசிகர்கள் படத்தைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்றும், மறுபக்கம் மற்றவர்கள் சமூகவலைத்தளங்களில் ’வலிமை அப்டேட்’ என்றும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவு பட்டிதொட்டி எங்கும் இந்த ஹேஷ்டேக் வேகமாக பரவியது. ரசிகர்களை அடுத்து தொடங்கி கிரிகெட் வீரர்களும் கூட அந்த படத்தின் அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

அடுத்து கொரோனா கோரத்தாண்டவமாட படம் இன்னும் காலதாமதமானது. ஒரு வழியாக 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் படம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளிடையே திரைப்படம் வெளியாகி வியாபார ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட கலவையான விமர்சனங்களையே பெற்றது.

’வலிமை’ தாமதம் போல், இந்த படமும் தாமதமாகிவிட கூடாது என்று இயக்குநர் தரப்பிடமும், தயாரிப்பாளர் தரப்பிடமும் அஜித் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனால் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஒரு சின்ன ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

ஏகே61-ஐ இந்திய அளவில் பான் – இந்தியா படமாகவும் வெளியிடும் எண்ணத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க பிரபலமான பாலிவுட் கதாநாயகிகளிடம் பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் ஏ.கே.61 படத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

வலிமையில், அப்படத்தின் நாயகி ஹியூமா குரேஷி பாதி படம் முடிக்கப்பட்ட பின்னரே இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் கதாநாயகிக்கான வேட்டை ஒரு பக்கம் இருந்தாலும், ஷூட்டிங் தொடர்கிறது. காரணம் ஏகே61-ஐ தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற திட்டம்தான காரணமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...