No menu items!

சிஎஸ்கேவின் கதை – 10 திருப்பி அடித்த சென்னை சிங்கங்கள்

சிஎஸ்கேவின் கதை – 10 திருப்பி அடித்த சென்னை சிங்கங்கள்

சென்னையில் ஆட முடியாவிட்டாலும் 20218-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள் சிஎஸ்கே வீரர்கள். 2 ஆண்டு தடைக்காலத்துக்குப் பிறகு மீண்டும் ஆடவந்த நிலையில் அந்த சுணக்கம் சற்றும் வெளிப்படாத வகையில் சென்னை அணி கோப்பையை வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், கடைசி ஓவரில் வெற்றியை இழந்தது.

இப்படி தொடர் வெற்றிகளால் ஐபிஎல் சாம்ராஜ்யத்தில் தங்கள் கொடியை பறக்கவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி மிகப்பெரிய சவாலாய் அமைந்தது. கொரோனா காரணமாக அந்த ஆண்டில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்கவில்லை. அதற்கு பதிலாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்தது.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை இந்திய மைதானங்களை கருத்தில்கொண்டு, அதிலும் குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கருத்தில்கொண்டு அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். சென்னை மைதானத்துக்கு மிகப்பெரிய அளவில் வேகப்பந்து வீச்சாளர் தேவையில்லை என்பதால் மித வேகப் பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் அணியில் அதிகமாக கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஆண்டில் போட்டி நடந்த சார்ஜா, துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் இந்த அணித்தேர்வு கைகொடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தார். தோனியின் வலதுகரமாக விளங்கிய அவரது திடீர் விலகல் சிஎஸ்கே வீரர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

போட்டிக்கு முன்னதாக வீரர்கள் தங்கும் அறையை ரெய்னா பார்த்ததாகவும் அப்போது தோனி தங்கும் அறையில் மட்டும் பால்கனி இருப்பதைப் பார்த்த ரெய்னா, தனக்கும் அதுபோன்ற அறை வேண்டும் என்று கேட்டதாகவும், அணி நிர்வாகம் அதை ஏற்க மறுத்ததால் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தொடருக்கு முன்பாக ரெய்னாவுக்கும், தோனிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்தான் அவர் பாதியில் வெளியேறினார் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் ரெய்னாவின் இந்த திடீர் விலகல், சிஎஸ்கே அணியை கடுமையாக பாதித்தது. இத்தொடரில் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், புள்ளிப் பட்டியலின் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டது.

முதல் அணியாக இத்தொடரில் இருந்து வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறாத ஒரே தொடர் இந்தத் தொடர்தான்.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதும், அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று பலரும் தெரிவித்தனர். தோனியேகூட இனி ஆடமாட்டார் என்று கூறப்பட்டது. 2020 தொடர்தான் தோனியின் கடைசி தொடர் என்றும் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடைசி சில போட்டிகளின்போது எதிரணிகளைச் சேர்ந்த வீரர்கள் தோனியிடம் இருந்து அவரது ஜெர்சியை பரிசாக வாங்கினர்.

ஆனால் அந்த தொடர் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, ‘இப்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை’ என்று அறிவித்தார். தோனியைப் போலவே சிஎஸ்கே அணியும் மற்றவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை.

ஒருசில் வீரர்களை மட்டுமே மாற்றினர். ‘சிஎஸ்கே நிர்வாகத்துக்கு அடிபட்டும் புத்தி வரலியே’ என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் தனது அணியை முழுமையாக நம்பியது. பழைய அணியையே இந்த முறையும் களத்தில் இறக்கியது.

தங்களை நம்பிய அணி நிர்வாகத்தை வீரர்களும் கைவிடவில்லை. ‘டாடீஸ் ஆர்மி’ என்று வயதை வைத்து எல்லோராலும் கிண்டலிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது அதேவேகத்தில் 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் தட்டித் தூக்கியது.

இந்த ஆண்டு முதல் 7போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னை தோற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவ்வளவுதான் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இதுப்போல் தாங்கள் கிண்டல் அடிக்கப் படும்போதெல்லாம் அதே வேகத்தில் வென்று எதிர்வினையாற்றுவது சென்னையின் வழக்கம்.

இந்த ஆண்டும் அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டுவரும் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...