ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.
இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.