No menu items!

மும்பை இந்தியன்ஸ் சறுக்கியது ஏன்?

மும்பை இந்தியன்ஸ் சறுக்கியது ஏன்?

இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரை சாம்பியன் அணிகளுக்கு பெரும் சறுக்கலாக தொடங்கியுள்ளது. ஒருபக்கம் 4 முறை சாம்பியனான சிஎஸ்கே, 7 ஆட்டங்களில் ஆடி, அதில் இரண்டில் மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. மறுபக்கம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இதுவரை தாங்கள் ஆடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விக்கான காரணங்களைப் பார்ப்போம்:

வீரர்கள் தேர்வு:

பொதுவாக ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலம் நடக்கும்போது வீரர்களை பார்த்துப் பார்த்து வாங்குவது மும்பையின் வழக்கம். சர்வதேச போட்டிகளில் ஆடும் வீரர்களை மட்டுமின்றி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் சிறந்த வீரர்களையும் அடையாளம் கண்டு, அவர்களை தட்டித் தூக்குவது மும்பையின் ஸ்டைல். ஆனால் இந்த ஆண்டில் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிதாக சொதப்பியது.

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, பொலார்ட் ஆகிய வீரர்களை ஏற்கெனவே 42 கோடி ரூபாய் வரை கொடுத்து தக்கவைத்த மும்பை அணி. என்ன ஆனாலும் இஷாந்த் கிஷனையும் வாங்கியாக வேண்டும் என்று முஷ்டியை உயர்த்தியது.

கடைசியில் இந்த ஏலத்திலேயே மிக அதிகமாக 15.25 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது. இப்படி 5 வீரர்களுக்காக மட்டுமே 57 கோடியை மும்பை செலவிடவேண்டி இருந்தது. அந்த அணிக்காக மொத்தம் ஒதுக்கப்பட்டது 90 கோடி ரூபாய். இந்நிலையில் மீதமுள்ள சுமார் 33 கோடியை வைத்துக்கொண்டு சிறந்த வீரர்களை அவர்களால் ஏலம் எடுக்க முடியவில்லை.

ஏற்கெனவே ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணிக்கு தாரை வார்த்த நிலையில் குருனால் பாண்டியா, தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்களை வாங்க முடியாத அளவுக்கு அவர்களின் நிதிநிலை இருந்தது.

ஜகா வாங்கிய ஆர்ச்சர்:

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஒருபக்கம் பும்ரா இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு இணையாக வலுவான ஒரு வேகப்பந்து வீச்சாளரை வைத்திருப்பது மும்பையின் வழக்கம், கடந்த முறை டிரெண்ட் போல்ட் இப்பணியை செய்துவந்தார். இந்த ஆண்டு பும்ராவுக்கு நிகரான பந்துவீச்சாளராக ஜோஃப்ரா ஆர்ச்சரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

மின்னல் வேகத்தில் பவுன்ஸர்களை பறக்கவிட்டு பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைப்பவர் ஆர்ச்சர். இவரது பந்துவீச்சில் பல வீரர்கள் ஹெல்மெட்டில் அடிவாங்கி உள்ளனர். அவர் அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு காரணத்தாலேயே 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டார்.

ஆனால் இந்த ஐபிஎல்லில் தான் ஆடப்போவதில்லை என்று ஆர்ச்சர் எடுத்த முடிவால், அவருக்காக செலவழித்த தொகை வீணானது. தரமான மற்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் அவர்களால் வாங்க முடியவில்லை.

சுமையாய் போன சுழற்பந்து:

மும்பை அணியின் மற்றொரு அடையாளம் அதன் சிறப்பான சுழற்பந்து வீச்சு. ஆனால் இம்முறை அதற்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான ராகுல் சாஹர் குர்னால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் மற்ற அணிகளுக்கு செல்ல, முருகன் அஸ்வின் போன்ற இளம் வீரர்களுடன் திருப்திப்படும் நிலைக்கு மும்பை தள்ளப்பட்டது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மகாராஷ்டிரா மைதானங்களில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டும் வைத்து ஆடவேண்டிய கட்டாயத்துக்கு அந்த அணி தள்ளப்பட்டது.

படுத்தி எடுக்கும் பேட்டிங்:

பந்துவீச்சு கைவிட்ட நிலையில் பேட்டிங்கையே மும்பை அணி பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் ரோஹித் சர்ம், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்ப, அதல பாதாளத்தில் விழுந்தது மும்பை இந்தியன்ஸ்.

இதல்லாம் ஒருபுறம் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் நெருக்குதல்களும் மும்பை அணியின் தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று சிலர் இதற்கு அரசியல் சாயமும் பூசுகிறார்கள்

. தோல்விக்கான காரணம் எதுவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டது என்னமோ மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...