No menu items!

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

சர்வதேச அளவில் தற்போது 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், வடகொரியா ஆகியவைதான் அந்த 9 நாடுகள். இந்த கணக்குப்படி உக்ரைன் நாட்டிடம் அணு ஆயுதம் ஏதும் இல்லை

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (Federation of American Scientists) வெளியிட்டுள்ள கணக்கின்படி ரஷ்யாவிடம்தான் உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. இதை வைத்துதான் மற்ற நாடுகளுக்கு ரஷ்யா ஆட்டம் காட்டுகிறது. இந்நாட்டிடம் அதிகபட்சமாக 5,977 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், இதில் சுமார் 1,500 அணு ஆயுதங்கள் காலாவதியானவை என்று கூறப்படுகிறது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் 1,185 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல்களில் சென்று தாக்கும் ஏவுகணைகளில் 800 அணு ஆயுதங்களும் விமானம் மூலம் தாக்கும் ஏவுகணைளைகளில் 580 அணு ஆயுதங்களும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை சிறிய வகை அணு ஆயுதங்கள் ஆகும்.

ரஷ்யாவுக்கு நிகராக நேட்டோ நாடுகளிடம் 5,943 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவிடம் மட்டும் 5,428 அணு ஆயுதங்களும் பிரான்ஸிடம் 290, இங்கிலாந்திடம் 225 அணு ஆயுதங்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீனா 350 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நிலையில் இந்தியாவிடம் 160 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அணு ஆயுதங்களை வைத்துள்ள 9 நாடுகளில் வட கொரியாவைத் தவிர மற்ற 8 நாடுகளும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...