No menu items!

Haldirams – Trending ஆன மிக்சர் சர்ச்சை

Haldirams – Trending ஆன மிக்சர் சர்ச்சை

ஒரு மிக்சர் பாக்கெட் இந்தியா முழுவதும் வைரலாகி ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது, தவறான காரணங்களுக்காக.

ஹால்டிராம்ஸ். நாம் அனைவரும் அறிந்த பெயர். நொறுக்குத் தீனிகளை பாக்கெட்டில் அடைத்து இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யும் நிறுவனம். தனது பொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

இன்று சுதர்சன் என்கிற வலதுசாரி சித்தாந்தத்தைப் பரப்பும் தொலைக்காட்சியின் நிருபர் டெல்லியிலுள்ள ஹால்டிராம்ஸ் கடைக்குள் மைக்குடன் நுழைகிறார். அங்கிருக்கும் மேலாளரிடம் ஹால்டிராம்ஸ் மிக்சர் பாக்கெட்டை காட்டி, “இதில் ஏன் உருதுவில் எழுதப்பட்டிருக்கிறது, ஏதாவது மறைக்கிறீர்களா?” என்று தடாலடி கேள்வியை எழுப்புகிறார்.

மேலாளர் பெண், “எதையும் மறைக்கவில்லை; மிக்சரில் இருக்கும் பொருட்கள்தாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதிலளிக்கிறார்.

ஆனால், நிருபர் பெண் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சண்டை போடுகிறார். “நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்” என்று காட்டமாய் கேட்கிறார்.

ஒரு கட்டத்தில் கடுப்பான ஹால்டிராம் கடை மேலாளர். “உங்களுக்கு வேண்டுமென்றால் மிக்சர் பாக்கெட்டை வாங்குங்கள். பிடிக்கவில்லை என்றால் வைத்துவிட்டு இடத்தை காலி செய்யுங்கள்” என்று கூறுகிறார்.

இந்த வீடியோதான் இன்று ட்விட்டரில் ட்ரெண்டிங்.

இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் சூடு பறக்கிறது.

‘அந்த மிக்சர் பாக்கெட்டுகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக தயாரிக்கப்பட்டவை. அதனால், அதில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவே ஹால்டிராம் மிக்சர் சர்ச்சை கிளப்பப்பட்டிருக்கிறது’ என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

‘இங்கே விற்பதற்கு எதற்கு உருது மொழி? இந்தியில் எழுதியிருக்கலாமே’ என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள் வலதுசாரி ஆதரவாளர்கள்.

‘உருது மொழியில் எழுதுவது குற்றமா? ரயில் நிலையங்களில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டில் உருது இருக்கிறது. ஆனால், ஹால்டிராம்ஸ் பாக்கெட்டில் உருது மொழி இருக்கக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் ஹால்டிராம்ஸ் ஆதரவாளர்கள்.

நமது நாட்டில் கடந்த சில மாதங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஹிஜாப் சர்ச்சை, அதைத் தொடர்ந்து ஹலால் இறைச்சி சர்ச்சை, இப்போது ஹால்டிராம்ஸ் மிக்சர் சர்ச்சை.

இதில் வேடிக்கையான சங்கதி என்ன வென்றால் ஹால்டிராம்ஸ் இந்துக்களால் நடத்தப்படும் நிறுவனம் என்பது; அந்த மிக்சர் பாக்கெட்டில் முழு சைவம் என்று பச்சை குறியீடும் குறிக்கப்பட்டிருப்பதுதான்.

இருந்தும் சர்ச்சை எழுப்பப்பட்டிருப்பது நாடு எதை நோக்கி போகிறது என்ற கேள்வியை அச்சத்துடன் எழுப்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...