No menu items!

படுக்கையறை காட்சி – மாளவிகா மோகனன் பதிலடி

படுக்கையறை காட்சி – மாளவிகா மோகனன் பதிலடி

இளசுகளின் இதய துடிப்பாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். பல ரசிகர் மன நிலையிலிருந்து கேட்கப்பட்டாலும் சில ஆபாச கேள்விகளாக இருந்தது. அதற்கும் பதிலடி கொடுத்திருந்தார் மாளவிகா. அவற்றிலிருந்து:

பைக்கில் நீங்கள் சென்ற நீண்டதூர பயணம் எது?

பைக்கில் நீண்டதூரம் பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். சமீபத்தில் இத்தாலியில் 18 மணிநேரம் தொடர்ந்து பைக் பயணத்தை மேற்கொண்டேன்.

எந்த விதமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

ஒரு நல்ல இயக்குநரின் படத்தில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்க தயாராக இருக்கிறேன்.

உங்கள் திருமணம் எப்போது?

நிச்சயமாக விரைவில் இல்லை.

நடிக்க வராவிட்டால் என்ன வேலைக்கு சென்றிருப்பீர்கள்?

ஒளிப்பதிவாளர் ஆகியிருப்பேன்.

கன்னட படத்தில் நடிப்பீர்களா? அப்படி நடித்தால் யாருக்கு ஜோடியாக நடிக்க விரும்புகிறீர்கள்?

கேஜிஎஃப் படத்துக்கு முன்பே நான் யஷ்ஹின் ரசிகை. அவருடைய இந்த வளர்ச்சியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கன்னட படத்தில் அவருடன் நடிக்க விரும்புகிறேன். அந்த விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

உங்கள் கனவு கதாபாத்திரம் எது?

போர்க்குணம் கொண்ட ஒரு ராஜகுமாரியாக நடிக்க விரும்புகிறேன்.

தளபதி விஜய்யைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல முடியுமா?

அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.

உங்கள் முதல் சம்பளத்தை என்ன செய்தீர்கள்?

என் அம்மாவுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தினேன்.

துல்ஹர் சல்மானைப் பற்றி?

மிகவும் வேடிக்கையான மனிதர். ’பட்டம் போலே’ படத்தில் நடிக்கும்போது அவரும் நானும் நிறைய பேசியிருக்கிறோம். நாங்கள் இருவரும் பல விஷயங்களில் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறோம்.

ரன்பீர் கபூர்?

பாலிவுட்டில் என் ஃபேவரைட் ஹீரோ.

மாறன் படத்தில் வந்த படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது?

உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் இருக்கிறது. (the inside of your head is a sad place indeed)

அது எப்படி அவ்வளவு பெரியதாக இருக்கிறது?

எனக்கும் அதிர்ச்சியாகதான் இருக்கிறது. சமூக ஊடகங்களில் சில ஆண்களுக்கு இருக்கும் பெரிய அடாவடியான நடத்தையைப் பார்த்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...