முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; ‘உடன்பிறப்பே…’ என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்! இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் – தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை ‘தமிழினத் தலைவர்’ கலைஞரைப் போற்றினேன் – ட்விட்டர் பதிவிலிருந்து
கனிமொழி கருணாநிதி எம்.பி.: 80 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் – தமிழர் என உழைத்து உயர்ந்தவர் தலைவர் கலைஞர். திராவிடக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த அவரது வாழ்க்கை, வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடிய வரலாறாகும்.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.: திராவிட தலைவர்கள் வகுத்த கொள்கையில் என்றும் பயணித்து தமிழ்நாட்டை வளர்ச்சி மிகு பாதைக்கு அழைத்து சென்ற முத்தமிழறிஞருக்கு, ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு அவரின் பிறந்தநாளில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் மரியாதை செய்தோம்.