No menu items!

Omicron XE கொரோனா – ஆபத்தா? அச்சப்பட வேண்டாமா?

Omicron XE கொரோனா – ஆபத்தா? அச்சப்பட வேண்டாமா?

கொரோனா விடுபட்டு இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம். அதற்குள் கொரோனா எக்ஸ் இ (Omicron XE) என்ற புதிய கொரோனா வருகிறது என்ற செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் சாலைகளின் ஆழ்ந்த மவுனத்தை கிழித்துக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்களின் அலறல் நின்று, ஆபீஸ் செல்லும் வாகனங்களின் இரைச்சல் அதிகரிக்க தொடங்கி சில நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் மற்றொரு வகை கொரோனா.. இது நமக்கு ஆபத்தா? அச்சமில்லையா?

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது தடம் பதித்துள்ளதாக சொல்லப்படும் கொரோனா, ‘ஒமைக்ரான் XE’ என அழைக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்த ஒரு பெண் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அவர் ‘ஒமைக்ரான் XE’ வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் மும்பையில் ஒருவர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட இந்த வகை கொரோனா 10 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்ற செய்தி மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

எங்கே உருவானது ஒமிக்ரான் XE?

ஒமிக்ரான் XE வைரஸ் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் தாய்லாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ் தலைகாட்டியுள்ளது. ஒமைக்ரானில் BA.1, BA.2, BA.3 என 3 உட்பிரிவுகள் உள்ளன. இதில் முதல் 2 வகை கொரோனாவும் இணைந்து உருவானதுதான் ஒமைக்ரான் XE.

முதல்கட்ட ஆய்வின்படி ஒமைக்ரான் வைரஸைவிட இந்த புதிய வகை வைரஸ் 10 சதவீதம் அதிகமாக பிறருக்கு தொற்றும் என்று கூறப்படுகிறது. இந்த நோயின் தன்மைகள் என்ன, இது என்னென்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

நோயின் அறிகுறிகள் என்ன?

ஒமிக்ரான் XE வைரஸ் சிலருக்கு மிதமான அறிகுறிகளையும், சிலருக்கு தீவிரமான அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்நோயின் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், தொண்டை அரிப்பு, இருமல், சளி, இரைப்பை பாதிப்பு, தோல் எரிச்சல் மற்றும் நிறம் மாறுவது போன்ற பிரச்சினைகள் இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தனி நபர்களின் உடல்நிலை, எதிர்ப்பு சக்தி, நோயின் தீவிரத்தன்மை ஆகியவற்றை வைத்து பாதிப்பின் தன்மை மாறுபடலாம் ஒரு சிலருக்கு இதய நோய் மற்றும் நரம்பியல் நோய்களும் ஏற்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையெல்லாம் கேள்விப்படும்போது, “மறுபடியும் முதல்ல இருந்தா?” என்ற மிரட்சி பலருக்கும் ஏற்படுவது இயல்புதான். ஆனால் “புதிய வரைஸை நினைத்து அதிகம் கவலைப்பட வேண்டாம். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா விதிகளை கடைபிடித்தால் இதையும் வெற்றிகரமாக சமாளித்து விடலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆறுதல் கூறுகிறார்கள்.

எவ்வளவோ தாண்டிவிட்டோம். இதையும் தாண்டுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...