No menu items!

நியூஸ் அப்டேட்: வன்னியர் இட ஒதுக்கீடு சிக்கல் – முதல்வர் விளக்கம்

நியூஸ் அப்டேட்: வன்னியர் இட ஒதுக்கீடு சிக்கல் – முதல்வர் விளக்கம்

சட்டமன்ற கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வான இன்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “7.5% இட ஒதுக்கீட்டை போல 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும். இட ஒதுக்கீடு ரத்தானதுக்கு அதிமுகவின் அவசர கதியே காரணம். தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது” என்றார். மேலும், “சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கக் கோரி தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் கடந்த மார்ச் 17-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ‘இளங்கலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு செல்லும். இந்த இட ஒதுக்கீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ‘எக்ஸ்இ’ கொரோனா இல்லை: மத்திய அரசு மறுப்பு

கொரோனா தொற்றின் புதிய திரிபான ‘எக்ஸ்இ’ பிரிட்டனில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரானின் பிஏ.1, பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும். கொரோனாவின் முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் எக்ஸ்இ 10 சதவீதம் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. இந்நிலையில் எக்ஸ்இ தொற்று மும்பையில் பதிவாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், இதனை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. தற்போதைய சான்றுகள் படி இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

இலங்கைக்கு இந்தியா உதவி: நன்றி உள்ளவர்களாக இருப்போம் என  ஜெயசூர்யா அறிக்கை

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, தமது நாட்டுக்கு இந்தியா பெரிய  அளவில் உதவி செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இலங்கை முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, “அண்டை நாடாகவும் எமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகிறது. இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கு பிறகு இந்தியாவை மேற்கு நாடுகள் குறி வைக்கும் – ரஷ்யப் பிரதிநிதி

ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியான எட்வார்ட் அலெக்ஸாண்ட்ரோவிச் பசுரின் ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “மேற்குலகம் ரஷ்யாவை அழிக்க விரும்புகிறது. அதோடு நின்றுவிடாது அது அடுத்ததாக இந்தியாவுக்குச் செல்லும்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...