பூனைகள் அதிகபட்சமாக சுமார் 30 ஆண்டுகளும், சராசரியாக 15 ஆண்டுகளும் உயிர் வாழும். அதேநேரத்தில் 30 வயதைக் கடந்து வாழ்ந்து சாதனை படைத்த பூனைகளும் உண்டு. அதேநேரத்தில் உலகில் உள்ள அத்தனை பூனைகளாலும் 30 ஆண்டுகள் உயிர்வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.
ஒவ்வொரு பூனையின் ஆயுளும் அவற்றின் மரபணுக்கள், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உண்ணும் உணவுகள் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும். நல்ல சுற்றுச்சூழலில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு வாழும் பூனைகள், மற்ற பூனைகளைவிட அதிக ஆண்டுகள் உயிர்வாழும்.
ஆண் பூனைகளைவிட பெண் பூனைகள் அதிக ஆண்டு வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுபோல் சாதாரண பூனைகளைவிட கலப்பின பூனைகள் அதிக ஆண்டுகள் உயிர்வாழும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.